search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassement"

    புதுச்சேரியில் பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாடலிங்காக பணியாற்றி வந்த பெண் ஊழியருக்கு ‘செக்ஸ்’ தொல்லை உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் அரசுக்கு சொந்தமான பாரதியார் பல்கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கலைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கூடத்தில் அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெருவை சேர்ந்த சுசிலா (வயது 63) என்ற பெண் மாடலிங்காக வேலை பார்த்து வந்தார்.

    சிற்பங்கள் வடிவமைக்க மற்றும் ஓவியங்கள் வரைய மாடலிங்காக போஸ் கொடுப்பது இவரது பணியாகும். பல்கலைக்கூடத்தில் ராஜேந்திரன் (58) என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று சுசிலா பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராஜேந்திரன் சுசிலாவிடம் சிறிய வேலை இருக்கிறது. எனது அறைக்கு வா என்று கூறினார்.

    அங்கு வந்த சுசிலாவிடம் ராஜேந்திரன் செக்ஸ் ரீதியாக அத்துமீற முயன்றதாக தெரிகிறது. உடனே சுசிலா அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

    இதுபற்றி அவர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    தேனி மாவட்டத்தில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.
    உத்தமபாளையம்:

    தேனி அருகே தேவாரம் சாலைத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 5 வயது மகள் அப்பகுயில் விளையாடச் சென்றார். அப்போது திடீரென அவர் மாயமானார். இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    18-ம் கால்வாய் பகுதியில் 2 மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இருவரையும் பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்ட சிறுமியை 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து வீட்டில் விட்டுள்ளார்.

    அந்த சிறுவனிடம் சிறுமியின் உறவினர்கள் விசாரித்த போது சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிறுவனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தேவாரம் பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தேவாரம் போலீஸ் நிலையம் அருகே குவிந்தனர். வீரபாண்டி திருவிழாவுக்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளனர்.

    இதனால் போலீஸ் நிலையத்தில் குறைந்த அளவே போலீசார் பணியில் இருந்துள்ளனர். தொடர்ந்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாரால் கட்டுபடுத்த முடியவில்லை.

    மேலும் போலீஸ் மெத்தனமாக செயல்படுவதாக கூறி அவர்களை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தில் சிலர் கல் வீசியதால் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்தது. எனவே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடத்தப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அசோக் பிரபாகரன் (16) என்ற சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ×