search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பாராளுமன்ற தேர்தல்"

    • 5 மாநில தேர்தல்களை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
    • 4 காங்கிரஸ் முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பினர் என்றார் ராகுல்

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் வெல்ல இந்திய தேசிய காங்கிரஸை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்ட "இந்தியா கூட்டணி" தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இந்தியாவில் வரும் நவம்பர் இறுதிக்குள் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, இந்திய தேர்தல் ஆணையம், இத்தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 5 அன்று வெளியிடப்படும்.

    இந்த 5 மாநில தேர்தல்களிலும், அடுத்த வருட அகில இந்திய தேர்தலிலும் வெற்றி காண அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

    இப்பின்னணியில் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் காரிய கமிட்டி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முழு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளது. ஏழைகளை முன்னேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முன்னேற்ற பாதையாக அமையும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இக்கணக்கெடுப்பை நடத்தும் திறன் படைத்தவரல்ல. காங்கிரஸின் 4 முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள 10 முதலமைச்சர்களில் ஒருவர் மட்டுமே ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். பிரதமர் ஓபிசி மக்களின் நலன்களுக்காக உழைக்கவில்லை. அவர்களின் கவனத்தை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், அம்மாநிலத்தில் 36 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் 27 சதவீதம் என்றும் பொதுப்பட்டியலில் 15 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

    • பா.ஜ.க.-விற்கு எதிராக பல கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்துள்ளன
    • நாடு 140 கோடி இந்தியர்களுக்கும் சொந்தம் என்கிறார் கெஜ்ரிவால்

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    இக்கூட்டத்தொடர் குறித்து ஆகஸ்ட் 31-ல் அறிவிக்கும் போது, "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்" என பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். கூட்டத்தொடரில் என்னென்ன முக்கிய முடிவுகள் விவாதிக்கப்படும் என தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து சிறப்புக் கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இச்செய்திக்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய தலைநகர் புது டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில், அவர் பெயரை குறிப்பிடும் இடத்தில் "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என குறிப்பிடப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்படுகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) எதிராக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இ.ந்.தி.யா. (I.N.D.I.A.) எனும் கூட்டணியை உருவாக்கின. இதில் ஆம் ஆத்மி கட்சி (AAP) எனப்படும் புது டெல்லியின் ஆளும் கட்சியும் அடக்கம்.

    "இந்தியா" எனும் பெயரை "பாரத்" என மாற்றும் முயற்சி நடைபெற போவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புது டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    இது சம்பந்தமான அதிகாரபூர்வ தகவல் எனக்கு வரவில்லை. 140 கோடி மக்களுக்கான இந்நாடு ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சிகள் இ.ந்.தி.யா. என ஒரு கூட்டணி அமைத்து விட்டால், இந்தியாவின் பெயரையே 'பாரத்' என மாற்றுகிறீர்கள். எங்கள் கூட்டணியின் பெயரை 'பாரத்' என மாற்றினால், நாட்டின் பெயரை 'பாரத்' என்பதிலிருந்து 'பா.ஜ.க.' (BJP) என நீங்கள் மாற்றுவீர்களா என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத போதிலும் இந்த சர்ச்சையில் பா.ஜ.க. பிரமுகர்களும், எதிர்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கடுமையான கருத்துக்களை முன்வைத்து விவாதித்து வருகின்றனர்.

    ×