search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்வார்குறிச்சி"

    • ஆழ்வார்குறிச்சி சேர்ந்தவர் முகமது வைசாலி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார்.
    • கருத்தப்பிள்ளையூர் சாலையில் மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது.

    நெல்லை:

    ஆழ்வார்குறிச்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பரூக். இவரது மனைவி முகமது வைசாலி(வயது 33). இவர் கடந்த 2-ந்தேதி தனது சகோதரர் செய்யது என்பவருடன் மொபட்டில் வந்துள்ளார்.

    கருத்தப்பிள்ளையூர் சாலையில் முகமது வைசாலி மொபட்டை ஓட்டி வந்தபோது கனமழை பெய்துள்ளது. அப்போது சாலை பள்ளத்தில் சறுக்கி மொபட் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் வைசாலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைசாலியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    • கடந்த 15-ந்தேதி விறகு எடுப்பதற்காக சென்ற அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பனங்காட்டு பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.
    • காளியம்மாள் அடிக்கடி காரணம் இல்லாமல் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரை திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரை கம்பால் அடித்துக்கொலை செய்ததாகவும் அவர் கூறினார்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள துப்பாக்குடி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காளியம்மாள் (வயது 67).

    அடித்துக்கொலை

    இவர்களது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஆறுமுகம் இறந்துவிட்டதால் காளியம்மாள் மட்டும் தனியாக இருந்து வந்தார்.

    கடந்த 15-ந்தேதி விறகு எடுப்பதற்காக சென்ற அவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பனங்காட்டு பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.ஆழ்வார்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தார்.

    தொழிலாளி கைது

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் காளியம்மாளின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரரான ஈஸ்வரன் என்ற தொழிலாளி, காளியம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். காளியம்மாள் அடிக்கடி காரணம் இல்லாமல் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரை திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து காட்டுப் பகுதியில் விறகு எடுத்து கொண்டிருந்த அவரை கம்பால் அடித்துக்கொலை செய்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×