search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தம்பதி"

    • பூனைக்கு வளைகாப்பு நடத்திய வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பலரும் தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

    பெங்களூரு:

    செல்லப்பிராணியான பூனையை வீடுகளில் வளர்க்க பலரும் விரும்புவார்கள். சில வீடுகளில் பூனைகள் வீட்டில் ஒருவர்போல பழகிவிடும்.

    கர்நாடகாவில் ஒரு தம்பதி பூனையை தனது மகள் போல பாவித்து வளைகாப்பு நடத்திய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடரமணசெட்டி. இவரது மனைவி நிர்மலா. இவர்கள் கப்பஹள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால் பெண் குழந்தை இல்லை. மகள் இல்லை என்ற குறை இவர்களுக்கு இருந்தது. இவர்களுக்கு பூனை வளர்ப்பதில் ஆர்வம். அதனால் வீட்டில் ஒரு பெண் பூனையை அதற்கு சுப்பி என பெயரிட்டு மகள் போன்று வளர்த்து வந்தனர்.

    தற்போது அந்த பூனை கர்ப்பமாக உள்ளது. இதையடுத்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துவது போல் அந்த பூனைக்கும் வீட்டில் வளைகாப்பு நடத்தினர்.

    பூனையை குளிப்பாட்டி புதிய ஆடை அணிவித்தனர். பின்பு அதற்கு மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து, வளையலிட்டு, ஆரத்தி எடுத்தனர். பூனைக்கு பிடித்தமான உணவினையும் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தங்களது பக்கத்து வீட்டினரையும் அழைத்திருந்தனர்.

    இதுகுறித்து ஆசிரியர் வெங்கடரமண ஷெட்டி கூறுகையில், "எங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லாததால், பெண் பூனையை சுப்பி என்று பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வருகிறோம். அந்த பூனை கர்ப்பமாக இருந்ததால் அதற்கு வளைகாப்பு நடத்தினோம். எனக்கு மகள் இருந்தால் எப்படி வளைகாப்பு நடத்துவேனோ அதை போல நடத்தினோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

    பூனைக்கு வளைகாப்பு நடத்திய வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த பலரும் தம்பதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். 

    • முதல் மகள் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
    • பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமைஆசிரியராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணகுமாா். அத்தி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவா் ரேவதி.

    தம்பதியான இவா்கள் கூடலூா் வண்டிப்பேட்டையிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகள் மற்றும் குடிநீா்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்கி தனது இரண்டாவது மகள் மகிழினியை முதல் வகுப்பில் சோ்த்தனா்.

    அவா்களின் முதல் மகள் நிகரிலி அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.அரசுப் பள்ளி ஆசிரியா்களான தம்பதி தங்களது குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சோ்த்ததை பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

    • ஆசிரியர் தம்பதி குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள கோவில்களுக்கு நடைபயணமாக சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
    • உத்தரகாண்ட், மத்திய பிரதேசத்தில் உள்ள கோவில்களை தரிசனம் செய்து ஐதராபாத் வந்தனர்.

    திருப்பதி:

    குஜராத் மாநிலம், துவாரகா பகுதியை சேர்ந்தவர் ஹர்தேவ் (வயது 74). இவரது மனைவி சரோஜா (70). இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்களாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள்.

    இந்த நிலையில் குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள கோவில்களுக்கு நடைபயணமாக சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி 2 பேரும் தங்களது துணிமணிகள், சமையல் செய்யும் பாத்திரங்களை 3 சக்கர சைக்கிளில் வைத்து நடைபயணம் தொடங்கினர். தினமும் 30 முதல் 40 கி.மீ. வரை நடைபயணமாக வருகின்றனர்.

    அவர்கள் உத்தரகாண்ட், மத்திய பிரதேசத்தில் உள்ள கோவில்களை தரிசனம் செய்து நேற்று ஐதராபாத் வந்தனர்.

    இதுவரை 137 நாட்களில் 4,700 கி.மீ. வந்ததாகவும், திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு ராமேஸ்வரம் வரை நடைபயணமாக செல்ல உள்ளதாகவும், செல்லும் வழியில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்ய உள்ளதாகவும் ஆசிரியர் தம்பதியினர் தெரிவித்தனர்.


    • ஆசிரியர் தம்பதி கொலையில் தனிப்படை தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

    அருப்புக்கோட்ைட

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 72). இவரது மனைவி ஜோதிமணி (62). இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.

    மகன் சதீஷ் சென்னையில் வசித்து வருவதால் ஆசிரியர் தம்பதி இருவரும் அருப்புக்கோட்டையில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் சங்கரபாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

    தனியாக வசித்து வந்த தம்பதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ஜோதிமணி அணிந்திருந்த தங்க நகைகளை காணாமல் ேபாயிருந்ததால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் திட்டமிட்டு தங்களது சதியை அரங்கேற்றி உள்ளனர்.

    மேலும் தடயங்கள் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் சம்பவ இடத்தில் போலீசாருக்கு எந்த தடயங்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த இரட்டை கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் மேற்பார்வையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் ஒரு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு, 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 10 தனிப்டைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் கொலையாளிகளை அடையாளம் காண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடப்பதற்கு முந்தைய நாட்களில் சந்தேகப்படும் வகையில் யாரேனும் திரிந்தார்களா? என்று அந்த பகுதியை சேர்்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் சங்கர பாண்டியன் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் கொலையாளிகள் குறித்த துப்பு கிடைத்து விடும் என்று போலீசார் கூறினர்.

    ×