search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிப் அலி சர்தாரி"

    • 2008 முதல் 2013 வரை ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
    • ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாக 2-வது முறை பதவியேற்க உள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அவருக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் நேற்று நடைபெற்றது. இதில் ஆசிப் அலி சர்தாரிக்கு 255 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட முகமது கான் அசாக்சாய்க்கு 119 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அதிக வாக்குகளைப் பெற்ற ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஆசிப் அலி சர்தாரி ஞாயிற்றுக்கிழமை அன்று முறைப்படி அதிபராக பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

    • நவாஸ் ஷெரீப்- பிலாவல் இணைந்து கூட்டு வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரியை நிறுத்தியுள்ளனர்.
    • இம்ரான் கான் தற்போது தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நவாஸ் ஷெரீப் கட்சியும், பிலாவல் பூட்டோ கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடைபெற்ற போதிலும் இதுவரை அரசு அமைக்கப்படவில்லை.

    நவாஸ் ஷெரீப்- பிலாவல் கட்சிகளின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக இம்ரான் கான் முகமது கான் அசாக்ஜாய்-ஐ அவரது கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

    முகமது கான் அசாக்ஜாய் பஸ்துன்-க்வா மிலி-அவாமி கட்சியின் தலைவர் ஆவார். சன்னி இத்தேஹாட் கவுன்சில் ஆதரவு பெற்றவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், அதிபர் தேர்தலில் முகமது கான் அசாக்ஜாய்க்கு வாக்களிக்கும்படி தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி மார்ச் 9-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்தாரி இன்று வேட்புமனு தாக்கல் இருக்கிறார்.

    தற்போது அதிபராக இருக்கும் ஆரிப் அல்வியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், அரசியல் அசாதார சூழ்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.

    பாகிஸ்தான் தேர்தல் விதிப்படி பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட் மற்றும் நான்கு மாகாண உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானர்கள்.

    • பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி.
    • ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 ‘டோஸ்’ தடுப்பூசிகள் மட்டுமின்றி, பூஸ்டர் டோசும் செலுத்தியுள்ளார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு (வயது 67) கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

    ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 'டோஸ்' தடுப்பூசிகள் மட்டுமின்றி, பூஸ்டர் டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிலாவல் பூட்டோ தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி உள்பட 20 பேர் தலைமறைவானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்: 

    பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் கூட்டாளியுமான உசேன் லவாயை அந்நாட்டின் பெடரல் விசாரணை முகமை கடந்த 6-ந் தேதி கைது செய்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்து உள்ளது. இது தொடர்பான விசாரணை அந்நாட்டின்  சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் சிக்கியுள்ள 20 பேரும் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. 

    இந்நிலையில், வங்கி நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட உசேன் லவாய்க்கு எதிராக பெடரல் விசாரணை முகமை கோர்ட்டில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த ஆவணத்தில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் உள்பட 20 பேர் தலைமறைவானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்து பேசிய சர்தாரியின் செய்தித்தொடர்பாளர் அமிர், அரசியல் நோக்கத்திற்காவும், சர்தாரியின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் பாராளுமன்ற பொதுதேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது மகள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வும், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி தலைமறைவானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்வும் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Pakistan #AsifAliZardari 
    ×