search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுக்குமாடி குடியிருப்புகள்"

    • பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம்.
    • லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரே வளாகத்தில் அமைந்துள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள கட்டடங்களுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்பு யூனிட்டுக்கு 8.15 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டது. இதுதவிர கிலோவாட்டுக்கு 204 ரூபாய் நிலை கட்டணமும் விதிக்கப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்போர் நல அமைப்புகள், மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைக்கப்படுமென 18-ந்தேதி முதல்வர் அறிவித்தார். அதற்கான உத்தரவை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

    10 வீடுகள் அல்லது அதற்கு குறைவான வீடுகள் உள்ள வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, லிப்ட் வசதியில்லாத குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 8.15 ரூபாய் என்பது 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

    பொது பயன்பாட்டுக்கான மின் கட்டண குறைப்பு சலுகையை பெற தாழ்வழுத்த மின் இணைப்பையும், டேரீப் மாற்றி கொள்ளலாம். பொது பயன்பாட்டு மின் இணைப்பு, 1டி என்ற வகையில் இருந்தது. இதில் யூனிட்டுக்கு 5.50 ரூபாய் மின் கட்டணம் செலுத்த தகுதியான பொது பயன்பாட்டு இணைப்புகளை 1இ என, வகை மாற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்பு வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1இ என்ற தாழ்வழுத்த மின் இணைப்பு வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிப்ட் வசதியில்லாத 3 மாடிக்கும் குறைவாக உள்ள வீடுகள் 10 வீட்டுக்கும் குறைவாக உள்ள வளாகங்கள் இந்த இணைப்பு பெறலாம்.

    அரசு உத்தரவுப்படி மின்வாரியம் 1இ இணைப்பை அறிமுகம் செய்துள்ளது. தகுதியானவர்கள் 1டி இணைப்பை 1இ என்று வகை மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்வது குறித்து விரைவில் அறிவிப்பு செய்யப்படும் என்றனர். குடியிருப்புகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணமாக கிலோவாட்டுக்கு 204 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. பயன்படுத்தும் மின்அளவை காட்டிலும் நிலை கட்டணம் தான் பெரும் சுமையாக வருகிறது. வாடகை வீடுகளில் வசிப்பவருக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது.எனவே வீடுகளுக்கான பொது பயன்பாட்டு மின் இணைப்புக்கு நிலை கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என மின்நுகர்வோர் எதிர்பார்த்து ள்ளனர்.

    • பயனாளிகளை உறுப்பினர்களாக இணைத்து குடியிருப்பு நலச்சங் கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • விரைவில் வீடுகளில் குடியேறி விடுங்கள் எனஅறிவுறுத்தி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டங்களின் போது மக்கள் அளிக்கும் மனுக்களில் பெரும்பாலானவை மனை மற்றும் குடியிருப்பு கோரிக்கையாகத்தான் இருக்கும். ஆயிரக்கணக்கில் மனுக்கள் அளிப்பவர்கள் இருந்தாலும் தங்களுக்கு எப்படியாவது குடியிருப்போ, மனையோ ஒதுக்கப்பட்டு விடாதா என்ற ஏக்கம் பலரது கண்களிலேயே தெரியும். இது யதார்த்தம் என்றாலும் திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 30 சதவீதம் பேர் வீடுகளை பெற்றும், குடியேறாமல் இருக்கின்றனர்.

    மாவட்டத்தில் நெருப்பெரிச்சல், வீரபாண்டி, அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் 3,744 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது.

    குடியிருப்போர் நலச்சங்கங்கள் அமைத்து குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாழ்விட மேம்பாட்டு வாரியம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், பயனாளிகளை உறுப்பினர்களாக இணைத்து குடியிருப்பு நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    குடியிருப்புகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது, திடக்கழிவுகளை அகற்றுவது, குடிநீர் வினியோகம் செய்ய பணியாளர்களை நியமிப்பது, சுற்றுப்புறங்களில் தெருவிளக்கு பொருத்தி அதை பராமரிப்பது, குடியிருப்புகளை உரிய இடைவெளியில் புனரமைப்பது குடியிருப்பு வளாகத்தில் பூங்கா அமைத்து பராமரிப்பது பாதுகாப்புக்கென கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல பணிகளை நலசங்கங்கள் ஏற்க வேண்டும்.

    இப்பணிகளை மேற்கொள்ளவும் அப்பணிக்கென நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை ஈடு செய்ய ஒவ்வொரு குடியிருப்புகளில் இருந்தும் 250 ரூபாய் வரை மாத சந்தா வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் குடியிருப்புகளை பெற்ற பயனாளிகள் பலர், வீடுகளை பூட்டி விட்டு குடியேறாமல் உள்ளனர். அந்த வகையில் 30 சதவீத வீடுகள் காலியாக உள்ளது என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சந்தா தொகையையும் செலுத்துவதில்லை. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியால், சங்கத்தை செயல்படுத்த முடியாமல் நலச்சங்க நிர்வாகிகள் திணறுகின்றனர். குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறங்களை சரிவர பராமரிக்க முடியாமல் திணறுகின்றனர்.

    இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு கூறியதாவது:-  அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பு, குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியிருப்புகளை பெற்ற நாளில் இருந்து அவர்கள் சந்தா தொகையை செலுத்த வேண்டும்.

    சிலர் போக்கியத்திற்கு இருக்கும் வீடுகளை உடனடியாக காலி செய்துவிட்டு வர முடியாது. பிள்ளைகளின் படிப்பு முடிந்தவுடன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகிறோம். பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு வராமல் உள்ளோம் என பல காரணங்களை கூறி, இனியும் குடியேறாமல் உள்ளனர். விரைவில் வீடுகளில் குடியேறி விடுங்கள் எனஅறிவுறுத்தி வருகிறோம்.

    குடியிருப்போர் நலச்சங்கங்களின் செயல்பாடுகளுக்கு, குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்பு வழங்கினால் தான் குடியிருப்புகளின் பராமரிப்பு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றை சிரமமின்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • வேலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் நடந்தது
    • 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகள், குடியிருப்புகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சென்னை விட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணா, நிர்வாக செயற்பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 864 காலி மனைகள் 38 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 25 வீடுகளுக்கு குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு நடந்தது.

    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒரு மாத கால அவகாசத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    ×