search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்"

    • போராட்டத்தில் அங்கன்வாடி காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டு
    • போராட்டத்தையொட்டி 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மேகலை தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் உமாராணி, இணைச் செயலாளர்கள் சாந்தி, உமாராணி, பிரவீனா, பரமேஸ்வரி உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தில் அங்கன்வாடி காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழியர்களுக்கு போல் வழங்கிட வேண்டும், தற்போது தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நலன்களை கருதி கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    போராட்டத்தையொட்டி 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    மதுரை:

    அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட செயலாளர் வரதலட்சுமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் தெய்வராஜ், செயலாளர் லெனின், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமுதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களிடம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மழை பெய்தது.

    அதனையும் பொருட்படுத்தாமல் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள், இன்று காலை வரை விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

    எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும், பள்ளி-கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது போன்று சிறிய குழந்தைகளுக்கும் கோடை வெயிலை சமாளிக்கவும், தொற்று நோய் பரவலை தடுக்கவும் மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    ×