என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Mother Language Day"

    • நெல்லை மாவட்ட தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
    • பேரணியை உதவி கலெக்டர் கோகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    உலக தாய்மொழி தினத்தையொட்டி நெல்லை மாவட்ட தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

    உதவி கலெக்டர்

    பாளை தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை முன்பிருந்து தொடங்கிய பேரணியை உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தமிழ்மொழியின் முக்கியத்துத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் சிலம்பம், தப்பாட்டம் மற்றும் கிராமிய கலைகள் நடத்தியவாறு கலந்து கொண்டனர்.

    பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு அருங்காட்சியகத்தில் முடிவடைந்தது. இதில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி, பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் ராஜேந்திரன், தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் உலக தாய் மொழி தினத்தையொட்டி காணொளி மூலம் உலகளாவிய கருத்தரங்கம் நடத்தியது.
    • மலேசிய நாட்டின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த பழனியம்மாள் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் உலக தாய் மொழி தினத்தையொட்டி காணொளி மூலம் உலகளாவிய கருத்தரங்கம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு பேராசிரியர் தமிழியலன் தலைமை தாங்கினார். சிந்தனையாளர் பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் நோக்கவுரையாற்றினார். புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம், மன்னர்மன்னன் படைப்பாளர் அறக்கட்டளை பொதுச்செயலாளர் ராமதாஸ்காந்தி, மலேசிய நாட்டின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த பழனியம்மாள் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தொடர்ந்து மலேசிய நாட்டை சேர்ந்த மோகன்குமார், செல்லையா, குணசீலன் சுப்பிரமணியன், பழனிகிருஷ்ண சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

    இதில் உலகில் உள்ள ஏராளமான தமிழர்கள் காணொளி மூலம் பங்கேற்றனர்.

    • அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக உள்ளது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத் தாய்மொழி நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தி ஆதிக்கத்திலிருந்து அன்னைத் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக 500-க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் இன்றைய நிலை வருத்தமும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் இருக்கிறது. இதை உணர்ந்து அன்னைத் தமிழ் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது.
    • அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

    சென்னை:

    மும்மொழியை ஏற்றால்தான் நிதி என்பதை மாற்றி மத்திய அரசு தமிழகத் துக்கு கல்வித் துறைக்கான ரூ.2,512 கோடியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பகுதிநேர பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு தனியார் விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன்.

    உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளைகள் மும்மொழி கற்பதற்கு உங்கள் அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்புவோம்.

    அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான்.

    சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். எங்கே தான் சென்றதோ கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய்.

    நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை-எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் தாய் மொழி தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

    உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்து உள்ளது.

    இதன்படியே, நமது பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×