என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியில் சிலம்பாட்டம் ஆடிய மாணவிகள்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி கிராமிய கலைகளுடன் விழிப்புணர்வு பேரணி
- நெல்லை மாவட்ட தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
- பேரணியை உதவி கலெக்டர் கோகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை:
உலக தாய்மொழி தினத்தையொட்டி நெல்லை மாவட்ட தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
உதவி கலெக்டர்
பாளை தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை முன்பிருந்து தொடங்கிய பேரணியை உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தமிழ்மொழியின் முக்கியத்துத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் சிலம்பம், தப்பாட்டம் மற்றும் கிராமிய கலைகள் நடத்தியவாறு கலந்து கொண்டனர்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு அருங்காட்சியகத்தில் முடிவடைந்தது. இதில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி, பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் ராஜேந்திரன், தமிழ் ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.