search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayashanthi"

    • விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.
    • தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

    நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று முன்தினம் விலகினார்.

    தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இது கருதப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

    விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்.

    தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
    • சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முறை கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சந்திரசேகரராவை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். எனவே சந்திரசேகரராவுக்கு எதிராக நான் காமரெட்டியில் போட்டியிட வேண்டும் என விரும்புவதில் தவறில்லை.

    எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் அல்ல என்றாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வியூக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

    சந்திரசேகர ராவ் போட்டியிடும் தொகுதியில் முதிராஜ் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் நடிகை விஜயசாந்தியை களமிறக்கவதற்கான கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×