என் மலர்
நீங்கள் தேடியது "Viduthalai Chiruthaigal"
- மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் படத்தை வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
- கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம் என்றார்.
மாமல்லபுரம்:
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் நாகம்மாளின் 16ம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில், 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம். இந்திய நாட்டிலேயே எந்தக் கட்சியும் வழங்காத ஒரு வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளோம்.
பெண்கள் அரசியலுக்கு வெட்கம் இல்லாமல், தைரியமாக வரவேண்டும். இதுதவிர மாற்று சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் 10 சதவீதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை செழியன், இ.சி.ஆர்.அன்பு, சாலமன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும்.
- விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. வை சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என திருமாவளவனும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று நேர்மையான விசாரணை தேவை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியை சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கைதிக்கு உடனே ஜாமின் வழங்க கூடாது என்றும் கூறினார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பதெல்லாம் கிடையாது. எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் அரசியல் செய்து வருதாக தி.மு.க. கூறி வரும் நிலையில் தற்போது யார் அந்த சார்? என்ற விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருமாவளன் கூறியிருப்பது மீண்டும் கூட்டணியில் புயலை கிளப்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
காலை 9 மணி அளவில் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் திரண்டு நின்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பெரியார் சிலை மீது காலணிகளை வீசினார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர்.
அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அங்கிருந்த அரசியல் கட்சியினர் சிலர் விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவரைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்தார். இதனை பார்த்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச் சென்று தாக்குதலுக்குள்ளான வாலிபரை கூட்டத்துக்குள் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு முயன்றனர். ஆனால் உடனடியாக அவரை மீட்க முடியவில்லை.
பின்னர் ஒருவழியாக கூட்டத்தினரின் பிடியில் இருந்து வாலிபரை வெளியில் கொண்டு வந்து போலீசார் அவரை பாதுகாப்பாக போலீஸ் வேனில் ஏற்றினர்.
இருப்பினும் கார் கண்ணாடி வழியாக கையை விட்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் காரை வெளியில் கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். ஆனால் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

பெரியார் சிலையை அவமதித்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோஷங்களை திருமாவளவன் எழுப்பினார். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையே பெரியார் சிலை மீது காலணியை வீசிய வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது பெயர் ஜெகதீஸ். ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். தென் சென்னை கூடுதல் கமிஷனர் மகேஸ் குமார் அகர்வால் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.






