என் மலர்
உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெண்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு - திருமாவளவன் பேச்சு

- மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் படத்தை வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
- கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம் என்றார்.
மாமல்லபுரம்:
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் நாகம்மாளின் 16ம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில், 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம். இந்திய நாட்டிலேயே எந்தக் கட்சியும் வழங்காத ஒரு வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளோம்.
பெண்கள் அரசியலுக்கு வெட்கம் இல்லாமல், தைரியமாக வரவேண்டும். இதுதவிர மாற்று சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் 10 சதவீதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை செழியன், இ.சி.ஆர்.அன்பு, சாலமன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.