search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle checking"

    • திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.
    • அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.


    காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது. இவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.

    மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு இட ங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. அதில் டாக்டர் ஒருவரிடம் பெற்ற பணம் இந்த ரூ.20 லட்சம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேசம் மற்றும் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • குடியரசுத் தலைவர் கோவைக்கு வருகை தர உள்ளார்.
    • ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    திருப்பூர் :

    மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை ஈசா யோகா மையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்ம விமானம் மூலமாக கோவைக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையின் அருகாமை மாவட்டமான திருப்பூரிலும் காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் புஷ்பா சந்திப்பு அருகில் இன்று காலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. #thiruvarurelection

    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 31-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இதன் அடிப்படையில் தேர்தல் செலவின கட்டுப்பாடுகளை கண்காணிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக 9 பறக்கும் படைகள், 6 நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் திருவாரூர் தொகுதியில் மட்டும் கங்களாஞ்சேரி, கானூர், சோழங்கநல்லூர், கிளரியம் , உத்திரங்குடி, வடபாதிமங்கலம், குடிதாங்கி சேரி, செல்லூர் உள்பட 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சோதனை சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் கொண்ட குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவாரூர் அருகே காணூரில் உள்ள சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.  #thiruvarurelection

    ×