திருப்பூரில் போலீசார் அதிரடி வாகன சோதனை

குடியரசுத் தலைவர் கோவைக்கு வருகை தர உள்ளார்.ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
போலீசார் ஆவணங்களை ஆய்வு செய்த காட்சி.
போலீசார் ஆவணங்களை ஆய்வு செய்த காட்சி.
Published on

திருப்பூர் :

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை ஈசா யோகா மையத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்ம விமானம் மூலமாக கோவைக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையின் அருகாமை மாவட்டமான திருப்பூரிலும் காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் புஷ்பா சந்திப்பு அருகில் இன்று காலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com