search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடி
    X

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடி

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. #thiruvarurelection

    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 31-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இதன் அடிப்படையில் தேர்தல் செலவின கட்டுப்பாடுகளை கண்காணிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக 9 பறக்கும் படைகள், 6 நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் திருவாரூர் தொகுதியில் மட்டும் கங்களாஞ்சேரி, கானூர், சோழங்கநல்லூர், கிளரியம் , உத்திரங்குடி, வடபாதிமங்கலம், குடிதாங்கி சேரி, செல்லூர் உள்பட 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சோதனை சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் கொண்ட குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவாரூர் அருகே காணூரில் உள்ள சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.  #thiruvarurelection

    Next Story
    ×