search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetables price hike"

    சென்னையில் காய்கறி விலை கடும் உயர்வால் பீன்ஸ் கிலோ ரூ.160, தக்காளி ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. #KoyambeduMarket
    சென்னை:

    பருவ மழை பெய்யாததாலும் கடும் வறட்சி காரணமாகவும் காய்கறி உற்பத்தி குறைந்துவிட்டது. கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு காய்கறி லாரி லோடு வரத்து பாதியாக குறைந்துள்ளது.

    தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட அண்டை மாநிலங்களிலும் கடும் வெயில் காரணமாக காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 10 லாரிகளில் பீன்ஸ் கொண்டுவரப்படும். தற்போது இது பாதியாக குறைந்து விட்டது. இதனால் பீன்ஸ் விலை ரு.130 ஆக உயர்ந்தது.

    கடந்த சில நாட்களாக உதகைமண்டலத்தில் உற்பத்தியாகும் பீன்ஸ் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவில்லை.

    மழை இல்லாததாலும் கடும் வெயிலாலும் காய்கறி விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை இரட்டிப்பாகி கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. பாகற்காய், புடலங்காய் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 375 லாரி லோடு காய்கறிகள் வரும். தற்போது 300 லாரி லோடுகளாக குறைந்து விட்டது.

    காய்கறி வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.160 ஆக உயர வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து, கோயம்பேடு காய்கறி, பழம், பூ மார்க்கெட் சங்க பொருளாளர் பி.சுகுமார் கூறியதாவது:-

    கோடை வெயில் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இதனால் காய்கறி விலை உயர்வடைந்துள்ளது. வெண்டைக்காய், வெங்காயம், கத்தரிக்காய் விலையில் மாற்றம் இல்லை.

    கடந்த 10 நாட்களாக மாங்காய் உற்பத்தி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.40 முதல் 60 ஆக குறைந்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக மார்க்கெட்டில் காய்கறி விற்பனை 30 சதவீதம் குறைந்து விட்டது. வருகிற ‘மே’ மாதம் புதிய காய்கறிகள் உற்பத்தியாகி வரும் போது விலை குறையும் என எதிர் பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket
    தருமபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி 4 ரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதத்தில் மழை சரிவர பெய்யாததால் விவசாயத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் அளவும் குறைந்து காணப்பட்டதால் விற்பனையும் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தக்காளி ஒரு கிலோ ரூ. 12-க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 28-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ. 28-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ. 26-க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ. 10-க்கும், முருங்கை ஒரு கிலோ ரூ. 25-க்கும், பச்சைமிளகாய் ஒரு கிலோ ரூ. 30-க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ. 20-க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ ரூ. 16-க்கும், தேங்காய் ஒரு கிலோ ரூ. 35-க்கும், சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ. 24-க்கும், வாழைக்காய் ஒரு கிலோ ரூ. 30-க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ. 26-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ. 60-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ரூ. 24-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 38-க்கும், முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ. 13-க்கும் மற்றும் பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 22-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்கப்படுகிறது.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த வாரம் ரூ. 10-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ. 18-க்கு விற்பனையாகிறது. கத்தரிக்காய் விலையும் அதிரடியாக கிலோ ரூ. 30 ஆக உயர்ந்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட லாரிகளில் காய்கறி வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விவரம் வருமாறு:-

    தக்காளி - ரூ.18
    வெங்காயம் -ரூ.20
    சி.வெங்காயம்- ரூ.45
    கேரட் -ரூ.30
    பீன்ஸ்- ரூ.80
    முட்டைகோஸ்- ரூ.5
    வெண்டைக்காய் - ரூ.15
    இஞ்சி - ரூ.50
    உருளை - ரூ.20
    பாகற்காய் - ரூ.30
    கொத்தவரை - ரூ.15
    வெள்ளரிகாய் - ரூ.20
    மாங்காய் - ரூ.10
    அவரைக்காய் - ரூ.25
    முருங்கைகாய் - ரூ.35
    புடலங்காய் - ரூ.12
    கோவக்காய் - ரூ.12
    கத்தரிக்காய்- ரூ.30
    கத்தரிக்காய் ரூ. 30
    டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #LorryStrike #DieselPriceHike
    சென்னை:

    சர்வதேச கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

    கடந்த மாதம் கச்சா எண்ணை விலை உயராவிட்டாலும் மற்ற காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்தன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86 வரை உயர்ந்தது. டீசல் விலையும் உச்சத்தை தொட்டது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சரக்கு லாரி உரிமையாளர்களுக்கு வருவாயில் கணிசமான தொகை இழப்பானது. இதனால் பெட்ரோல்-டீசல் விலைகளை கட்டுப்படுத்த அகில இந்திய லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் மத்திய அரசு இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பெட்ரோல்-டீசல் விலைகள் குறைந்தன. என்றாலும் அவை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.

    இந்தியா முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. டீசல் விலை எதிர்பார்த்த அளவுக்கு குறைக்கப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். லாரி உரிமையாளர்கள் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

    டீசல் விலையை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும். சுங்க கட்டணம் மற்றும் மூன்றாம் நபர் விபத்து காப்பீட்டு கட்டணம் போன்றவற்றை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

    கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்று (18-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று  முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது.


    தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாதவரத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிற்கின்றன. பல்வேறு இடங்களுக்கு செல்லக் கூடிய லாரிகள் சரக்குகளை ஏற்றாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

    லாரி டிரைவர்களும், கிளீனர்களும் லாரிகளில் அமர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார்கள். லாரி ஸ்டிரைக் தொடங்கி இருப்பதால் காய்கறிகள், எண்ணை, மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் இன்று குறைவாக வந்துள்ளன. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படும். ஆனால் இன்று 250 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்ததாக கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

    சென்னைக்கு இன்று காலை வந்த சுமார் 250 லாரிகள் வெளிமாநிலங்களுக்கு புறப்பட்டு செல்லாது. அவை கோயம்பேட்டிலேயே நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் முழுமையாக தடைப்பட்டு விடும்.

    லாரி ஸ்டிரைக் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் 2, 3 நாட்களுக்கு காய்கறிகள் வராது. எனவே காய்கறிகள் விலை கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.

    காய்கறிகள் வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கும். நேற்றைய விலையை விட இன்று விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் லாரி வாடகை ரூ.8000 அதிகரித்து விட்டது. 20-ந்தேதி முதல் காய்கறிகள் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

    காய்கறிகளை போல மற்ற பொருட்களையும் வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மாதவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளின் டிரைவர் ஒருவர் கூறுகையில், ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதை மீறி சரக்குகளை ஏற்றிச் சென்றால் பிரச்சனை ஏற்படும் என பயந்து நிறுத்தி வைத்துள்ளேன் என்றார்.


    ஒரு சில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை மீறி லாரிகளை இயக்கினால் பாதிப்பு ஏற்பட்டு விடும் என பயந்து லாரியை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதற்கிடையில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் முக்கிய சங்கங்கள் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. லாரி உரிமையாளர்கள் மாநில சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறும்போது, “சுமார் 4½ லட்சம் உறுப்பினர்களை கொண்ட எங்கள் சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    ஜூலை மாதம் 20-ந்தேதி வேலை நிறுத்தம் அறிவித்து இருக்கிறோம். அதற்குள் நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறும் என்றார்.

    தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #LorryStrike #DieselPriceHike
    டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.

    தமிழ்நாட்டில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி பகுதிகளில் இருந்து காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன. இவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னைக்கு வருகின்றன.

    தற்போது டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப லாரி வாடகையும் உயர்த்தப்படுகின்றன. இதனால் முன்பு இருந்ததைவிட லாரி வாடகை அதிகரித்துள்ளது.

    காய்கறி உற்பத்தி அதிகமானதால் கடந்த ஏப்ரல் மாதம் வரை சென்னைக்கு காய்கறி வரத்து அதிகமானது. இதனால் காய்கறிகளின் விலை மிகவும் குறைந்தது.

    தற்போது டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது. கோடை காரணமாக காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது.

    பச்சை பட்டாணி கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. இஞ்சி விலை ரூ.80 ஆக உள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பெரிய வெங்காயம் (கிலோ) ரூ.10 முதல் 13 வரை. சின்ன வெங்காயம் ரூ.25-28, தக்காளி ரூ.10-15, அவரை ரூ.20-25, கேரட் ரூ.20-25, பீட்ரூட் ரூ.15-20, முள்ளங்கி ரூ.10-15, கத்திரிக்காய் ரூ.10-15, புடலங்காய் ரூ.10-15, கோவங்காய் ரூ.15-20, நூல்கோல் ரூ.15-20, வெண்டைக்காய் ரூ.15-20, காலிபிளவர் ரூ.20-30, சேனை கிழங்கு ரூ.15-20, 20-22, உருளைகிழங்கு, 20-25, ப.மிளகாய்-ரூ. 15-20, முருங்கைகாய் ரூ.30-35.

    இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கோடை காலம் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×