search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீசல் விலை உயர்வு எதிரொலி: காய்கறி விலை கடும் உயர்வு
    X

    டீசல் விலை உயர்வு எதிரொலி: காய்கறி விலை கடும் உயர்வு

    டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது.
    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.

    தமிழ்நாட்டில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி பகுதிகளில் இருந்து காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன. இவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னைக்கு வருகின்றன.

    தற்போது டீசல் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப லாரி வாடகையும் உயர்த்தப்படுகின்றன. இதனால் முன்பு இருந்ததைவிட லாரி வாடகை அதிகரித்துள்ளது.

    காய்கறி உற்பத்தி அதிகமானதால் கடந்த ஏப்ரல் மாதம் வரை சென்னைக்கு காய்கறி வரத்து அதிகமானது. இதனால் காய்கறிகளின் விலை மிகவும் குறைந்தது.

    தற்போது டிசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருக்கிறது. கோடை காரணமாக காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது.

    பச்சை பட்டாணி கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. இஞ்சி விலை ரூ.80 ஆக உள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பெரிய வெங்காயம் (கிலோ) ரூ.10 முதல் 13 வரை. சின்ன வெங்காயம் ரூ.25-28, தக்காளி ரூ.10-15, அவரை ரூ.20-25, கேரட் ரூ.20-25, பீட்ரூட் ரூ.15-20, முள்ளங்கி ரூ.10-15, கத்திரிக்காய் ரூ.10-15, புடலங்காய் ரூ.10-15, கோவங்காய் ரூ.15-20, நூல்கோல் ரூ.15-20, வெண்டைக்காய் ரூ.15-20, காலிபிளவர் ரூ.20-30, சேனை கிழங்கு ரூ.15-20, 20-22, உருளைகிழங்கு, 20-25, ப.மிளகாய்-ரூ. 15-20, முருங்கைகாய் ரூ.30-35.

    இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கோடை காலம் காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×