search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck overturned accident"

    • 2 லட்சம் மதிப்பிலான பழங்கள் சேதமடைந்தன
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் பாலப்பன் (வயது 52).

    இவருக்கு சொந்தமான லாரியில் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 5 டன் மாதுளம் பழம் மற்றும் கொய்யாப்பழம் 1 டன் என 6 டன் பழங்களை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்றனர்.

    அப்போது திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே பங்களா மேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக வந்து அருணாச்சலம் ஓட்டி சென்ற லாரி மீது மோதியது.

    கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அருணாச்சலம் உயிர் தப்பினார். மேலும் 2 லட்சம் மதிப்பிலான பழங்கள் சேதமடைந்தன.

    விபத்து ஏற்படுத்திய மற்றொரு லாரியின் ஓட்டுனர் லாரியை அங்கே விட்டு தப்பி சென்றார் இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மினி லாரியில் கர்நாடக மாநிலத்திற்கு கனரக வாகனத்துக்கான என்ஜின் பாகத்தை ஏற்றி வந்துள்ளார்.

    ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் கோபால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான மினி லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளில் மோதியது
    • போக்குவரத்து பாதிப்பு

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து இன்று காலை இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    வேலூர் அருகே உள்ள பொய்கை மேம்பாலம் அருகே வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    சாலை தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் பாய்ந்து சென்னை பெங்களூர் சாலையில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை முழுவதும் சிதறின.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் சென்னை பெங்களூர் மார்க்கத்தில் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.

    விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    உடனடியாக பெங்களூர் நோக்கி வந்த வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பி விட்டனர்.

    இதனையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு சாலையில் லாரி மற்றும் இரும்பு கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து சீரானது.

    இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    லாரி டயர் வெடித்து விபரீதம்

    போக்குவரத்து பாதிப்பு

    வேலூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிரானைட் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு லாரி ஒன்று வந்தது.

    வேலூரில் அருகே உள்ள அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தபோது திடீரென லாரி டயர் வெடித்தது. இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்புகளை நொறுக்கியபடி தறிகெட்டு ஓடி தலை குப்புற கவிழ்ந்தது.

    இதில் லாரி முழுவதும் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த டிரைவர், கிளீனரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விபத்தில் நொறுங்கிய லாரியை அங்கிருந்து அப்புறபடுத்தினர்.

    இன்று காலையில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×