search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy railway station"

    • திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பொலிவு பெற்று வருகிறது
    • பாரம்பரியமும், பழமையும் சற்றும் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு வாயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது

    திருச்சி:

    தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சிக்கு பல்வேறு அடையாளங்கள் இருந்தபோதிலும் அதில் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தனிப்பெருமை உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் தென்னக ரெயில்வேயின் தலைமையிடமாக திகழ்ந்த திருச்சி ரெயில் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. வட, தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கு முக்கிய சந்திப்பு பகுதியாக தற்போது வரை இருந்து வருகிறது.

    சாலை போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவத்தை அரசு அளித்தபோதிலும், ரெயில் போக்குவரத்திற்கு உள்ள மவுசு சற்றும் குறையவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தினமும் 30 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர். அதேபோல் 80 ஆயிரம் பயணிகள் நாள்தோறும் கடந்து செல்கின்றார்கள்.

    வரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருச்சி ரெயில் நிலையத்தை பழமை மாறாமல் நவீனப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள பணிகளில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அதிக பயணிகளை கையாளும் வகையில், ெரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் அருகே புதிதாக ரூ.3.15 கோடி செலவில் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இதன் மூலம் டிக்கெட் கவுண்டரில் பயண சீட்டை வாங்கிக்கொண்டு அதன் பின்பகுதிக்கு வந்தால் இப்புதிய நுழைவு வாயிலை அடைய முடியும். இங்கு ஒரே நேரத்தில் 80 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நுழைவு வாயிலில் இருந்து நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேக்டர்) மூலம் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களுக்கும் எளிதாக செல்ல முடியும். இது வயது முதிர்ந்தோர்கள் சிரமமின்றி அனைத்து நடைமேடைகளுக்கும் செல்ல ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல தற்போதைய கல்லுக்குழி செல்லும் நுழைவுவாயிலுக்கு மாற்றாக புதிதாக ஏற்படுத்தபட்டுள்ள 8-வது நடைமேடை வழியாக ெரயில் நிலையத்துக்குள் நுழையும் வகையில் பாரம்பரியமும், பழமையும் சற்றும் மாறாமல் புதிதாக ரூ.4.20 கோடி செலவில் முன்பதிவு டிக்கெட் வசதியுடன் நுழைவு வாயில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இது தவிர ெரயில் நிலைய வளாகத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் இருசக்கர வாகனங்கள், 400 கார்கள் வரை நிறுத்துவதற்கான இட வசதியும் மேம்படுத்தபட்டுள்ளன.

    இது குறித்து திருச்சி கோட்ட வணிகப்பிரிவு முதுநிலை மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், ெரயில் நிலையத்தில் 2-வது நுழைவு வாயில் முதல் 8-வது நடைமேடை வரையில் உள்ள அனைத்து பிளாட்பாரங்களிலும் லிப்ட் வசதியுடன் இணைக்கப்பட்ட எஸ்கலேட்டர் வசதி ரூ.10.60 கோடி செலவில் 6 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர விமான நிலையத்தில் உள்ளது போலவே அனைத்து வசதிகளும் அடங்கிய நவீன பார்சல் பிரிவு, லிப்ட் வசதிகள், அதிநவீன கழிவறைகள், 3 பெரிய ஓட்டல்கள், 14 சிறிய சிற்றுண்டியகங்கள், வாடகை இ-பைக் வசதிக்கான மையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்,

    நவீன கட்டுப்பாடு அறைகள், அதிநவீன அவசர சிகிச்சை மையம், 5 இடங்களில் ஏடிஎம் மிஷின்கள், செல்பி பாயின்ட, சுற்றுலாத்தகவல் மையம், ஒரே நேரத்தில் 800 பயணிகள் அமரும் வகையில் நவீன இருக்கை வசதிகள், குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாத பயணிகள் காத்திருப்பு அறை வசதிகள் என அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

    2-வது நுழைவு வாயில், கல்லுக்குழி நுழைவு வாயில், எஸ்கலேட்டர் என அனைத்து பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன. வரும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் இந்த அனைத்து நவீன வசதிகளும், பயணிகளுக்கு கிடைக்கும் என்றார்.

    இந்த நவீன வசதிகள் மூலம் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான கட்டணம், நிறைவான பயணத்தை விரும்பும் சாமானியர்களிடம் இந்த வசதிகள் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    சென்னை சென்ட்ரல், திருச்சி உள்ளிட்ட 36 முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல், திருச்சி, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, அலகாபாத், லக்னோ, குவாஹட்டி, செகந்திராபாத், விசாகப்பட்டினம், புவனேஷ்வர், புனே, மைசூரு, ஜெய்ப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

    சுற்றுச்சூழலை பாதுகாக் கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ரெயில் பயணிகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் அவற்றிற்கு பதிலாக மாற்று பொருட்களுளை உபயோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

    அதன் ஒரு பகுதியாக ‘ஐ.எஸ்.ஏ. 14001’ தர சான்றிதழ் பெறுவதற்காக 36 ரெயில் நிலையங்களில் 5 சதவீத நிலையங்களை கண்டறிந்து தூய்மைப் பணி, குடிநீர் வசதி, மின்சார சிக்கன நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், பார்வையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க சுகாகாரத்துறை மூலம் கண்காணிக்கப்படுவார்கள். ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராவை பயன்படுத்தி கண் காணித்து இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக் கப்படுகிறது.

    முதலில் 36 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் வகை யில் இத் திட்டம் நிறை வேற்றப்படுகிறது. ரெயில் நிலையங்களில் திடக்கழிவு பொருட்களையும் பிளாஸ் டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து ஐ.எஸ்.ஒ. 14001 தர சான்றிதழை பெறுவதே ரெயில்வே துறையின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல் படுத்த நோடல் ஆபீசர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். ரெயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பிளாட்பாரங்கள், உடனுக்குடன் சுத்தம் செய் யப்பட வேண்டும், உறை கழிவுகள், திண்பண்டங்களின் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக் கும் தடை விதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரெயில் நிலையங்கள் தூய்மையாகிவிடும் என்ப தோடு மட்டுமின்றி சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும் என்பது உறுதி.

    ×