என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TK Shivakumar"
- பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை.
- நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது.
புதுடெல்லி:
வெளிநாட்டில் இருந்து இன்று காலை நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பெங்களூர் சென்று சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். பெங்களூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க முதல்-மந்திரி சித்தராமையாவோ அல்லது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரோ வரவில்லை. பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு பிரதமர் மோடி தடை விதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும, தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமருக்கு முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக காங்கிரஸ் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி மீது அவர் மிகவும் எரிச்சல் அடைந்தார். இதனால் நெறிமுறைக்கு மாறாக விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கு தடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இது மலிவான அரசியல் அன்றி வேறு ஒன்றுமில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் சந்திரயான்-1 வெற்றிக்காக 22 அக்டோபர் 2008 அன்று அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாடு மையத்துக்காக அப்போதைய முதல்-மந்திரி மோடி சென்றதை பிரதமர் மோடி மறந்துவிட்டாரா?
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.