என் மலர்

  நீங்கள் தேடியது "Thoothukudi firing case"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  சென்னை:

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், தனது இறுதி அறிக்கையை மே மாதம் 18-ம் தேதி சமர்ப்பித்துள்ளது.

  இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.

  அலுவலர்கள் மீதான நடவடிக்கை தொடர்பான விவரங்களுடன் கூடிய ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.
  புதுடெல்லி:

  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது.  துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தி அளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

  துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. அதிகாரி சரவணன் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Thoothukudifiring
  புதுடெல்லி:

  சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

  முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 20 உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  சென்னையில் சி.பி.ஐ. உயர் அதிகாரிகளில் ஒருவராக சரவணன் இருந்தார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில் அவர் மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் வங்கி முறைகேடுகள் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

  நிரவ்மோடி செய்துள்ள வங்கி மோசடியை விசாரிக்கும் பிரிவுக்கு தற்போது அவர் சென்றுள்ளார்.

  சரவணன் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தை தொடர்ந்து விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள பணிகளை பார்த்துக்கொண்டே அவர் கூடுதலாக இந்த பணியையும் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

  2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வந்த டெல்லி சி.பி.ஐ. அதிகாரி விவேக் பிரியதர்சி சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொரு சி.பி.ஐ. அதிகாரி கவுதமிடம் உள்ள பொறுப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

  இதற்கிடையே நாகேஸ்வர ராவ் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வக்கீல் பிரசாந்த் பூ‌ஷன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.

  இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை அந்த பெஞ்சில் நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. #Thoothukudifiring
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ThoothukudiFiring
  மதுரை:

  தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அகில இந்திய வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் முத்து அமுதநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் டிஐஜி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

  ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும்,  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுககு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

  அவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மனுதாரரின் மனுவிற்கு நாளை மறுநாள் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. #ThoothukudiFiring
  ×