என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம் அருவிகள்"

    • ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது.
    • மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையத்தால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பகுதிக்குள் தொடர்ந்து கனமழை பெய்தது.

    இதன் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 6 மணி முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரவு முதல் இன்று காலை வரை வனப்பகுதிக்குள் மழை தொடர்வதால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து செம்மண் நிறத்தில் விழ தொடங்கியுள்ளது.

    ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், பழைய குற்றால அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.


    குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் வானம் கருமேகக் கூட்டங்கள் நிறைந்து, சாரல் மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தடையால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் தூரத்தில் நின்று அருவிகளை பார்த்து குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    • மற்ற அருவிகள் அனைத்தும் முழுமையாக வறண்டு பாறையாக காட்சியளிக்கின்றன.
    • அருவி பகுதிகளில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகளும் குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி தென்காசி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும், கடுமையான வெயிலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்பட்டு வரும் குற்றாலத்தில் அருவிகளில் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகின்றது. கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு பெய்த தொடர் கோடை மலையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மீண்டும் மழை குறைந்ததையடுத்து பழைய குற்றாலம் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து குளிக்கும் வண்ணம் தண்ணீர் கொட்டியது. நேற்று முன்தினம் மாலையில் பெய்த மிதமான மழையினால் வெயிலின் தாக்கமானது குறைந்து காணப்பட்டாலும் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது.

    இதனால் அருவிகளுக்கு ஓரளவிற்கு வந்த தண்ணீரும் முற்றிலுமாக நின்றது. தற்போது பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்கும் அளவிற்கு குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மற்ற அருவிகள் அனைத்தும் முழுமையாக வறண்டு பாறையாக காட்சியளிக்கின்றன. அருவி பகுதிகளில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகளும் குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • இந்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் பல்வேறு அருவிகள் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.

    இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ×