என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coconut saplings"

    • சங்கரன்கோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • மணலூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டாரம் மணலூர் கிராம பஞ்சாயத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் ராமர் தலைமை தாங்கினார். மணலூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

    இதில் வேளாண்மை அலுவலர் சுரேஷ், துணை வேளாண்மை அலுவலர் வைத்திலிங்கம் வாசுதேவநல்லூர் எஸ் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் முத்துலட்சுமி, சவுமியா, வர்ஷா தேவி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது.
    • சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த தளியில் உள்ள தென்னை மகத்துவ மையமானது விவசாயிகளுக்கு தரமான தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்து வினிேயாகம் செய்தல், பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்தல், விஞ்ஞான ரீதியாக தென்னை சாகுபடி முறைகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தல் மற்–றும் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்கள் தொடங்க தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தின் செயல் விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் 23 ஆயிரம் மேற்கு கடற்கரை நெட்டை மற்றும் ஆயிரத்து 300 மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது. ஒரு நெட்டை ரக தென்னங்கன்றின் விலை ரூ.80-க்கும், குட்டை ரக கன்றின் விலை ரூ.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் 04252-265430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அலுவலக வேலை நாட்களில் தென்னங்கன்றுகளை வாங்கிச்செல்லலாம். தென்னங்கன்றுகள் வாங்கிச் செல்லும் போதே பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது. குறைந்தது 0.1 ஹெக்டர் முதல் அதிகபட்சமாக நான்கு ஹெக்டேர் வரை அதாவது 15 கன்றுகள் முதல் 700 தென்னங்கன்று வரை ஒரு விவசாயி பெற்று பயன் அடையலாம்.

    ஒரு ஹெக்டேர் குட்டை ரக கன்றுகளுக்கு ரூ.7ஆயிரத்து 500-ம் நெட்டை ரக கன்றுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500-ம் இரண்டு தவணைகளாக பிரித்து விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் மானிய விலையில் தென்னங்கன்றுகளை பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்று தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ஜி.ரகோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.
    • மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம் செட்டியாபத்து ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் சிவலூரில் நடைபெற்றது. செட்டியாபத்து ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களைப் பெற்று பேசுகையில், மரங்களை வளர்ப்பது மனிதனின் பொறுப்பு, ஒவ்வொரு மனிதனும் ஒரு மரம் வளர்க்க வேண்டும், மரங்கள் அதிகமாக வளர்த்தால், மழை வரும் பசுமையான சூழ்நிலை உருவாகும் என்றார். பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளை அவர் வழங்கினார்.

    கூட்டத்தில் செட்டியாபத்து ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், சிவலூர் ஊர்தலைவர் முருகன், வேளாண்மைத்துறை அலுவலர் அஜித்குமார், பற்றாளர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சியின் வரவு செலவினங்கள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம் ஆகிய திட்டங்கள், பயனாளிகளின் தகுதிகள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலர் கணேசன் நன்றி கூறினார்.

    வீட்டுக் காய்கறித் தோட்ட விதைகள் மற்றும் உரங்கள், உளுந்து விதைகள், ஸ்பிரேயர்கள் போன்றவை வழங்கப்பட்டன.

    அவினாசி:

    அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், தமிழக முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சி கானொலி காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    இதையடுத்து அவினாசி வட்டாரம் செம்பியநல்லூர்கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக தென்னங்கன்றுகள் ,வீட்டுக் காய்கறித் தோட்ட விதைகள் மற்றும் உரங்கள், உளுந்து விதைகள், ஸ்பிரேயர்கள் போன்றவை வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் செம்பியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர் வி.கே. சுதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனலட்சுமி, அவினாசி ஆத்மா தொழில்நுட்ப தலைவர் சின்னக்கண்ணன் என்கிற ஆறுமுகம், ரமேஷ் காந்திமதி உள்பட திரளான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கு நல வாரிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான முகாமும் நடைபெற்றது. மேலும் மக்களை தேடி மருத்துவம் அமைப்பின் கீழ், வந்திருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ×