விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்

சங்கரன்கோவில் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.மணலூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
விவசாயிகளுக்கு  தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்டாரம் மணலூர் கிராம பஞ்சாயத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் ராமர் தலைமை தாங்கினார். மணலூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

இதில் வேளாண்மை அலுவலர் சுரேஷ், துணை வேளாண்மை அலுவலர் வைத்திலிங்கம் வாசுதேவநல்லூர் எஸ் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் முத்துலட்சுமி, சவுமியா, வர்ஷா தேவி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com