search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "street campaign"

    • மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப்பெற கோரியும், தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • சிவகிரி விவசாய கூட்டுறவு சங்க இயக்குநர் விநாயகர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் பால்துரை சிறப்புரையாற்றினர்.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பு சிவகிரி நகர காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், ஓ.பி.சி. பிரிவு, மகளிர் காங்கிரஸ், வர்த்தக காங்கிரஸ் ஆகியவை சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் என்ற திட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப்பெற கோரியும், தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். நகர தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் குருசாமிப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் நம்பிராஜன், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிவகிரி விவசாய கூட்டுறவு சங்க இயக்குநர் விநாயகர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் பால்துரை சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத்தலைவர் சங்கை கணேசன், புளியங்குடி நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், வாசுதேவநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் மகேந்திரன், மாவட்ட காங்கிரஸ் விவசாய அணித் தலைவர் மணி, சங்கரன்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்துரை (வடக்கு), அய்யாத்துரை (தெற்கு) மற்றும் நகர தலைவர்கள் வாசுதேவநல்லூர் செல்வராஜ்,

    ராயகிரி காளியப்பன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், நகர முன்னாள் தலைவர் மஞ்சுநாத், பொதுச்செயலாளர் தங்கப்பாண்டியன் வாசுதேவநல்லூர் தொகுதி தலைவர் ராஜ்குமார், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உலகேஸ்வரி, கணேசன், கலா என்ற கல்யாணசுந்தரி முத்து அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    திருப்பூர் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 39-வது வார்டுக்குட்பட்ட ராக்கியாபாளையம் பிரிவு, 38-வது வார்டுக்குட்பட்ட நல்லூர், 35-வது வார்டுக்குட்பட்ட விஜயாபுரம் ஆகிய 3 இடங்களில், அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக அரசின் சாதனைகள், பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், வேங்கை விஜயகுமார் ஆகியோரும் விளக்கவுரை ஆற்றினார்கள். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், தொகுதி பொறுப்பாளர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் டெக்ஸ் வெல் முத்துசாமி, கருவம்பாளையம் மணி, கிளை செயலாளர்கள் அரசு ஆறுமுகம், சக்திவேல், பால சுந்தரம், பொன்னுசாமி, வி.ஜி. வி பாலு, கண்ணபிரான் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×