search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speedbreak"

    • 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும்

    திருப்பூர்:

    பல்லடம் வழியாக செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சாலை விரிவாக்கத்துக்குப் பின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் காளிவேலம்பட்டி பிரிவு அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஒருசில விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

    • அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடக்கின்றன.
    • விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.

    உடுமலை:

    கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரத்தை கடந்ததும் ராகல்பாவி கிராமத்துக்கான இணைப்பு ரோடு பிரிகிறது. இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசலும் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை அமைக்கும் பணி அப்பகுதியில் துவங்கியது.

    பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில், இந்த அணுகுசாலை அமைக்கப்படுகிறது.இதனால் அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடப்பதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயமும் நிலவுகிறது.அணுகுசாலை, நெடுஞ்சாலை இணையும் இடத்தில் பணிகள் நிறைவு பெறாத நிலையில் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு குழப்பங்கள் அதிகரித்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக ராகல்பாவி சந்திப்பு பகுதியில் மீண்டும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். அணுகுசாலை-தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெரிசல் இல்லாமல் பஸ்களை நிறுத்தவும் தனியிடம் ஒதுக்க வேண்டும். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பெண்ணாடம் அருகே எந்தவித அறிவிப்பு பலகையும் இல்லாமல் வேகத்தடை அமைத்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்துள்ள சின்ன கொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் விபத்துக்களை தடுக்க நேற்று மாலை புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது.

    இந்த வேகத்தடையின் அருகில் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. அதன் அருகே மின்வளக்கு வசதியும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாததால் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.

    இந்தநிலையில் பெண்ணாடத்தை அடுத்த முருகன் குடியை சேர்ந்த சலீம் என்பவர் நேற்று இரவு பெண்ணாடம் ரெயில் நிலையத்துக்கு சென்று அவரது உறவினர் சாயிரா பானு என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு முருகன்குடி நோக்கி வந்தார். கொசப்பள்ளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடை இருப்பது தெரியாமல் சலீம் வந்து கொண்டிருந்தார்.

    புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை மோட்டார் சைக்கிள் கடந்த போது சலீமின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடு மாறிய சலீமும், அவரது உறவினர் சகீரா பானுவும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பேரும் வேகத்தடை அமைக்கப்பட்ட கொசப்பள்ளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர். வேகத்தடை உள்ள பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும், காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்துநின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வேகத்தடையின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    ×