search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ராகல்பாவி பிரிவு சந்திப்பில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்

    உடுமலை ராகல்பாவி பிரிவு சந்திப்பில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

    • அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடக்கின்றன.
    • விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.

    உடுமலை:

    கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரத்தை கடந்ததும் ராகல்பாவி கிராமத்துக்கான இணைப்பு ரோடு பிரிகிறது. இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில் பிளிங்கிரிங் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் நெரிசலும் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை அமைக்கும் பணி அப்பகுதியில் துவங்கியது.

    பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில், இந்த அணுகுசாலை அமைக்கப்படுகிறது.இதனால் அணுகுசாலை ,தேசிய நெடுஞ்சாலை, கிராம இணைப்பு ரோடு என ரோடு சந்திப்பில் தாறுமாறாக வாகனங்கள் கடப்பதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயமும் நிலவுகிறது.அணுகுசாலை, நெடுஞ்சாலை இணையும் இடத்தில் பணிகள் நிறைவு பெறாத நிலையில் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு குழப்பங்கள் அதிகரித்துள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக ராகல்பாவி சந்திப்பு பகுதியில் மீண்டும் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். அணுகுசாலை-தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். நெரிசல் இல்லாமல் பஸ்களை நிறுத்தவும் தனியிடம் ஒதுக்க வேண்டும். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×