என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமிர் கான்"

    • கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
    • திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

    படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் மகளுக்கு நடிகர் அமீர் கான் மிரா என்ற பெயரை வைத்தார். மேலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணு விஷால் கூறியது " ஓஹோ எந்தன் பேபி படத்தை அமீர் கான் சார் பார்த்தார். பார்த்துவிட்டு படம் முடியும் போது ஆனந்த கண்ணீர் விட்டு. இம்மாதிரியான உறவுமுறை பற்றி கூறும் திரைப்படங்கள் தற்பொழுது குறைவாகிவிட்டது . திரைப்படம் நன்றாக இருக்கிறது என பாராட்டினார்"

    • விஷ்ணு விஷால், ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு அண்மையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்நிலையில், விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டியுள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    • எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
    • எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

    மும்பை:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்துள்ளார். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படம் வெற்றியடைய பெரிதும் நம்பிக்கையுடன் காத்துள்ளார் கங்கனா ரணாவத். எமர்ஜென்சி திரைப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது கங்கனா ரணாவத் பேசியதாவது:

    ஷாருக் கான், அமிர் கான், சல்மான் கான் என 3 பேரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது. நன்றாக நடிக்கவும், அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும்.

    அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    • லோகேஷ் கனகராஜ் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • பாலிவுட் நட்சத்திர நடிகரான அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சௌபின் சாஹிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பல நேர்காணலில் இரும்புகை மாயாவி என்ற திரைப்படத்தை குறித்து அவர் கூறியுள்ளார். அத்திரைப்படமே அவரின் டிரீம் ப்ராஜக்ட் எனவும் கூறியுள்ளார். இப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்பொழுது இப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகரான அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரும்பு கை மாயாவி திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். ஆனால் இத்தகவலை குறித்து லோகேஷும் அமீர்கானும் எதும் செய்திகளை கூறவில்லை. இதனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×