ஷாருக், சல்மான், அமீர் என 3 கான்களையும் ஒரே படத்தில் இயக்க ஆசை: கங்கனா ரணாவத்

எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
ஷாருக், சல்மான், அமீர் என 3 கான்களையும் ஒரே படத்தில் இயக்க ஆசை: கங்கனா ரணாவத்
Published on

மும்பை:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்துள்ளார். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படம் வெற்றியடைய பெரிதும் நம்பிக்கையுடன் காத்துள்ளார் கங்கனா ரணாவத். எமர்ஜென்சி திரைப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது கங்கனா ரணாவத் பேசியதாவது:

ஷாருக் கான், அமிர் கான், சல்மான் கான் என 3 பேரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது. நன்றாக நடிக்கவும், அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும்.

அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com