என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளி துடைப்பம்"
- தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
- கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.
தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இறை வழிபாடு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முக்கியமானது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது.
பொதுவாக அக்ஷய திருதியை மற்றும் தீபாவளி போன்ற நன்னாளில் அவரவர் வசதிக்கேற்ப தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் இப்போது தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாது.
இந்த சூழலில் தங்கத்திற்கு பதிலாக கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தீபாவளியன்று துடைப்பம் வாங்குவது மிகவும் நல்லது. நல்ல நாளில் போய் துடைப்பம் வாங்குவதா என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது. அதனால் துடைப்பத்தை வாங்கி வீட்டில் ஏதேனும் ஓர் ஓரத்தில் வைத்தாலே மகாலட்சுமியின் அருள் நிறைந்து பண வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.
வாழ்வில் எப்போதும் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என்பவர்கள் தீபாவளியன்று துடைப்பத்தை வாங்கி அதை யாருக்கேனும் தானமாக கொடுக்கலாம். இப்படி செய்தால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.
தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
- ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி நடைபெற்றது.
- ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 'அகில் பாரதிய மங் சமாஜ்' என்ற அமைப்பைச் சேர்ந்த ராம பக்தர்கள், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வெள்ளி துடைப்பம் ஒன்றைக் காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த வெள்ளி துடைப்பம் 1.751 கிலோ எடை கொண்டது. மேலும் இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது.
இந்தத் துடைப்பத்தைச் செய்து முடிக்க 11 நாட்கள் ஆனதாகவும், 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டதாகவும் அதில் பாரதிய மங் சமாஜ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துடைப்பத்தை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






