என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைப்படம் திரையீடு"

    • கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.

    புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது. விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவுக்கான லோகோ வெளியிடப்பட்டது

    இதனை சட்டசபையில் உள்ள தனது அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அப்போது, விருது பெறும் இயக்குநர்களின் பெயர் பட்டியலை அவர் வெளியிட்டார்.

    2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிதர்தண்டா டபுள் எக்ஸ், 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி ஆகிய தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர் முகமது அஹசன் அபித், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    நாளை வியாழக்கிழமை மாலை கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு புதுவை அரசின் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் திரைப்பட இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.

    விழாவில் திரைப்பட நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநர்கள், பா.ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.

    சர்வதேச திரைப்பட விழாவையொட்டி புதுவை அலையான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாள்களும் சர்வதேச திரைப்படங்கள் நாளுக்கு 2 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.

    குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நாளுக்கு 3 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.

    மொத்த 12 தமிழ் திரைப்படங்கள் உள்பட 45 திரைபடங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களைக் காண விரும்புபவர்கள் புதுவை பிலிம் பெஸ்டிவெல் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    • 2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் பார்ப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.

    2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் இத்திரைப்படம் குழந்தைகள் தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகுதி வாரியாக பிரித்து இந்த வார இறுதி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காணாமல் போன சிட்டுக்குருவியை, இரு குழந்தைகள் தேடும் போது அவர்களின் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து இப்படம் விளக்குவதாக உள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×