என் மலர்
நீங்கள் தேடியது "தேர்வில் தோல்வி"
- பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது.
- பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவில் இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் லாரி டிரைவர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி டிரைவர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரித் தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் டிரைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆன்றாபட்டி அருகே உள்ள குப்பாண்டாம் பாளையம் ஊராட்சி வன்னியர் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் கபில் ஆனந்த் (வயது 41) லாரி டிரைவர்.
இவருக்கு நதியா என்ற மனைவியும், ஹரி ரஞ்சித், விக்னேஷ் ஆகிய 2 மகன் உள்ளனர்.
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஹரி ரஞ்சித், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்தனர். தனது இரு மகன்களும் தேர்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் கபில் ஆனந்த் இருந்து வந்தார்.
தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகன்களாவது படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த கபில் ஆனந்த் மகன்கள் தேர்வில் தோல்வி பேரதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து நேற்று மாலை வீட்டிலிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் சென்ற கபில் ஆனந்த் கதவை சாத்திவிட்டு கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கடப்பாறை கொண்டு கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கபில் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தனது மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்றாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
- 2-ம் ஆண்டு படிக்கும்போது 8 பாட பிரிவில் அரியர் வைத்துள்ளார். தற்போது அதற்கான தேர்வு எழுதி நேற்று தேர்வு முடிவு வெளிவந்துள்ளது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரது மகள் ஷாலினி (வயது 20). இவர் வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார். இவர் 2-ம் ஆண்டு படிக்கும்போது 8 பாட பிரிவில் அரியர் வைத்துள்ளார். தற்போது அதற்கான தேர்வு எழுதி நேற்று தேர்வு முடிவு வெளிவந்துள்ளது.
அதில் 2 பாடப்பிரிவில் தேர்ச்சியும் 6 பாடப்பிரிவில் தோல்வியும் அடைந்துள்ளார். அதனால் மன உளைச்சலில் கல்லூரிக்கு வரும்பொழுது கல்லூரியின் அருகில் 4 அரளிக்காயினை சாப்பிட்டுள்ளார். பின்பு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் அழைத்து வந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள். ஆத்தூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கல்லூரி மாணவியர் இடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடலூரில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் திடீர் மாயமானார்கள்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் குட்டைகார தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 35). இவரது மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார். இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக பூமாது மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் 12 -ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் வாங்கி வருவதாக வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் உறவினர் 12- ம் வகுப்பு மாணவி 2 பேரும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாணவிகளை தேடி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






