என் மலர்
நீங்கள் தேடியது "கூடுதல் தண்ணீர் திறப்பு"
- 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் 3-ம் கட்ட பூர்வீக பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
- திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் 3-ம் கட்ட பூர்வீக பாசனத்திற்காக கடந்த மாதம் 29-ந்தேதி 2500 கனஅடிநீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று அணையிலிருந்து கூடுதலாக 3200 கனஅடிநீர் பாசனத்திற்கு வெளியேற்ற ப்பட்டது.
இன்று காலை மேலும் கூடுதலாக 1700 கனஅடி சேர்த்து 4969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் 60.33 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 613 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 3666 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ப்படுவதால் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் அதிகமாக செல்லும் இடங்களில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டமும் 142 அடியில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது 140.50 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்றதால் நீர்வரத்து 279 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 511 கனஅடி நீர் வெளியேற்ற ப்படுகிறது. நீர் இருப்பு 7261 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி, வரத்து 57 கனஅடி, திறப்பு 30 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.64 அடி, வரத்து 21 கனஅடி,திறப்பு 27 கனஅடி.
- இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
- கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
கூடலூர்:
மதுரை குடிநீர் திட்டத்தி ற்காக லோயர்கேம்ப் அருகே முல்லைபெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றுமுன்தினம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க ப்பட்டன.
நேற்று காலை 6 மணி யிலிருந்து 150 கனஅடி நீர்மட்டம் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டதால் மின்உற்பத்தி நடை பெறவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் 22 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. வரத்து 266 கனஅடி, இருப்பு 2285 மி.கனஅடி.
தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மழை ஆடி மாதத்தில் பெய்யும். தற்போது தாமதமாக பெய்துள்ள நிலையிலும் விவசாய பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
இதேபோல் போடி, சோத்துப்பாறை, பெரிய குளம், வீரபாண்டி, தேவ தானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. நேற்று 157 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று 53 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலி ருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1615 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 68.22 அடியாகவும் உள்ளது.
கூடலூர் 1.2, சண்முகாநதிஅணை 5.6, உத்தமபாளையம் 1, போடி 1.6, வைகை அணை 3.8, சோத்துப்பாறை 4, பெரிய குளம் 1.4, வீரபாண்டி 3.4, அரண்மனைப்புதூர் 6.3, ஆண்டிப்பட்டி 5.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
- சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டுகிடந்த அணைகள், குளம், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணை யிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 400 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 800 கனஅடியாக உயர்த்த ப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 132 அடிவரை உயரும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வைகைஅணையின் நீர்மட்டம் 52.72 அடியாக உள்ளது. அணைக்கு 710 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
57 உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். எனினும் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 47 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழை யால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது. அணைக்கு 42 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வன த்துறையினர் அறிவித்தனர். இன்று 2-ம் நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவதால் தடை தொடரும் என தெரிவித்த னர்.
இதேபோல் வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு 2-ம் நாளாக தடை தொடரும் என வன த்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பெரியாறு 7.6, தேக்கடி 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதிஅணை 10.8, போடி 9.6, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 2.2, வீரபாண்டி 7.4, ஆண்டிபட்டி 45, அரண்மனைப்புதூர் 24 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டபோதிலும் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. வரத்து 1083 கன அடி. திறப்பு 1050 கன அடி. இருப்பு 5960 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.70 அடியாக உள்ளது. வரத்து 1053 கன அடி.திறப்பு 105 கன அடி. இருப்பு 4861 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடி. வரத்து 193 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 423 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 156 கன அடி. திறப்பு 156 கன அடி. நீர் இருப்பு 100 மி.கன அடி.
கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று 11-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரூல்கர்வ் நடைமுறைப்படி கடந்த 6ந் தேதி முதல் கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் மதகுகள் 10 செ.மீ. அளவுக்கு திறக்கப்ப ட்டு அந்த நீர் இடுக்கி அணைக்கு செல்கிறது.
- இன்று காலை அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. வரத்து 10431 கன அடி. இதில் தமிழக பகுதிக்கு 2147 கன அடியும், கேரள பகுதிக்கு 8307 கன அடியும் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரூல்கர்வ் நடைமுறைப்படி கடந்த 6ந் தேதி முதல் கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் மதகுகள் 10 செ.மீ. அளவுக்கு திறக்கப்ப ட்டு அந்த நீர் இடுக்கி அணைக்கு செல்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 139 அடியை எட்டியது. இதனால் மாலை 5 மணி அளவில் அைணயையொட்டி உள்ள 10 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 7246 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று முன்தினம் 3266 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. வரத்து 10431 கன அடி. இதில் தமிழக பகுதிக்கு 2147 கன அடியும், கேரள பகுதிக்கு 8307 கன அடியும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7012 மி. கன அடியாக உள்ளது.
லோயர்கேம்ப் அருகே வைரவனாறு, வெட்டுக்காடு, கம்பாமடை, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 4 இடங்களில் கடந்த 2006ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை நீர் தாழ்வாக செல்லும் இடங்களில் சிறுபுனல் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தற்போது அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் இந்த 4 இடங்களிலும் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
நீர் வரத்து உள்ள சமயங்களில் மின் நிலையங்கள் முழுமையாக செயல்படும். ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திலும் 2 டிரான்ஸ்பார்மர்கள் வீதம் வினாடிக்கு 1.25 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும். அதன்படி 4 ஜெனரேட்டர்கள் மூலம் மொத்தம் வினாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.
தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த ஒரு மாதமாக மின் உற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. வரத்து 2707 கன அடி. திறப்பு 3909 கன அடி. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கும் தண்ணீர் கூடுதலாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5771 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 46 கன அடி. இருப்பு 435 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 131 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
பெரியாறு 69.2, தேக்கடி 27.2, கூடலூர் 5.7, உத்தமபாளையம் 1.3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- இன்று காலை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 2401 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 4523 கன அடி நீர் வருகிறது.
கூடலூர்:
பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 136 அடியை கடந்த நிலையில் 142 அடியை எட்டுமா என விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர். ஆனால் ரூல்கர்வ் முறைப்படி 10ந் தேதி வரை 142 அடி தேக்க முடியாது.
இதனால் முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விட ப்பட்டுள்ளது. இதனால் கேரள பகுதிகளான வல்லக்கடவு, வண்டிபெரி யாறு, சப்பாத் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆற்றங்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று 10 ஷட்டர்கள் மூலம் 2228 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 2401 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 4523 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 138.25 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியில் நீடிக்கிறது. அணைக்கு 3040 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2761 கன அடி நீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 92 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 133 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் குடிநீருக்கும் 130 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது.
பெரியாறு 21.4, தேக்கடி 30.8, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பில் பருவ மழை இயல்பாக பெய்து வந்த போதும் ரூல் கர்வ் முறையை கடைபிடிக்க கேரள அரசு நிர்பந்தம் செய்து வருகிறது.
- உபரி நீர் வெளியேற்றத்தை தவிர்க்க முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். பருவ மழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ள அபாயத்தின் போது தண்ணீர் தேக்கும் அளவு, அணையில் இருந்து கேரள பகுதியில் உள்ள உபரி நீரை வெளியேற்றுவது ஆகியவை குறித்த ரூல் கர்வ் முறையை மத்திய நீர் வள ஆணையம் நிர்ணயித்துள்ளது.
ஆனால் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பில் பருவ மழை இயல்பாக பெய்து வந்த போதும் ரூல் கர்வ் முறையை கடைபிடிக்க கேரள அரசு நிர்பந்தம் செய்து வருகிறது.
இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த 16-ந் தேதி 135.50 அடியாக உயர்ந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
அணையின் நீர் மட்டம் 136 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி முதல் நீர் பிடிப்பு பகுதியில் மழை அளவு குறையத் தொடங்கி அணைக்கு நீர் வரத்தும் குறைந்தது.
ரூல் கர்வ் விதிப்படி ஜூலை 31-ந் தேதி வரை 137 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது. செப்டம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையுலும், நவம்பர் 30-ந் தேதிக்கு பின்பு மட்டுமே 142 அடிக்கு தண்ணீர் தேக்க முடியும். இந்த கால கட்டங்களில் அணைக்கு வரும் உபரி நீரை ஷட்டர்கள் மூலம் கேரள பகுதிக்கு ெவளியேற்ற வேண்டும்.
எனவே கேரள பகுதிக்கு உபரி நீர் வெளியேற்றத்தை தவிர்க்க முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிாக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 133.95 அடியாக சரிந்துள்ளது.
தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1872 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்து 847 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5621 மி.கன அடியாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மட்டும் அணையில் இருப்பி வைத்துக் கொண்டு தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கவும், வரும் அக்டோபர் மாதம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பாக வைகை அணையில் தண்ணீரை இருப்பு வைக்கவும், பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வைகையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாலும் வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவடிப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 62.34 அடியாக உள்ளது. வரத்து 1647 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4064 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.90 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 70.32 அடியாகவும் உள்ளது.
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல் சாகுபடிக்காக கடந்த 1ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
- தண்ணீர் திறப்பு 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
கூடலூர்:
கேரளாவில் பருவ–மழை போக்கு காட்டி வரும் நிலையில் முல்லை–ப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல் சாகுபடிக்காக கடந்த 1ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாற்றாங்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட விவசாய பணிகளில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. நேற்று வரை 600 கன அடி பாசனத்திற்கும், 100 கன அடி குடிநீருக்கும் திறக்கப்பட்டது.
இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு 410 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 129.25 அடியாக உள்ளது. 71 அடி உயரம் கொண்டுள்ள வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக சரிந்து 54 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு 297 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையில் இருந்து 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.30 அடியாக உள்ளது. 59 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்ைல. சோத்துப்பாறை அைணயின் நீர்மட்டம் 86.26 அடியாக உள்ளது. 97 கன அடி நீர் வருகிறது. 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3.8, தேக்கடி 6.8, கூடலூர் 1.7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






