search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening of additional water"

    • முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பில் பருவ மழை இயல்பாக பெய்து வந்த போதும் ரூல் கர்வ் முறையை கடைபிடிக்க கேரள அரசு நிர்பந்தம் செய்து வருகிறது.
    • உபரி நீர் வெளியேற்றத்தை தவிர்க்க முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். பருவ மழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ள அபாயத்தின் போது தண்ணீர் தேக்கும் அளவு, அணையில் இருந்து கேரள பகுதியில் உள்ள உபரி நீரை வெளியேற்றுவது ஆகியவை குறித்த ரூல் கர்வ் முறையை மத்திய நீர் வள ஆணையம் நிர்ணயித்துள்ளது.

    ஆனால் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பில் பருவ மழை இயல்பாக பெய்து வந்த போதும் ரூல் கர்வ் முறையை கடைபிடிக்க கேரள அரசு நிர்பந்தம் செய்து வருகிறது.

    இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த 16-ந் தேதி 135.50 அடியாக உயர்ந்த நிலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    அணையின் நீர் மட்டம் 136 அடிக்கும் குறைவாக உள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி முதல் நீர் பிடிப்பு பகுதியில் மழை அளவு குறையத் தொடங்கி அணைக்கு நீர் வரத்தும் குறைந்தது.

    ரூல் கர்வ் விதிப்படி ஜூலை 31-ந் தேதி வரை 137 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது. செப்டம்பர் 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையுலும், நவம்பர் 30-ந் தேதிக்கு பின்பு மட்டுமே 142 அடிக்கு தண்ணீர் தேக்க முடியும். இந்த கால கட்டங்களில் அணைக்கு வரும் உபரி நீரை ஷட்டர்கள் மூலம் கேரள பகுதிக்கு ெவளியேற்ற வேண்டும்.

    எனவே கேரள பகுதிக்கு உபரி நீர் வெளியேற்றத்தை தவிர்க்க முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிாக பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 133.95 அடியாக சரிந்துள்ளது.

    தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1872 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்து 847 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5621 மி.கன அடியாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மட்டும் அணையில் இருப்பி வைத்துக் கொண்டு தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கவும், வரும் அக்டோபர் மாதம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பாக வைகை அணையில் தண்ணீரை இருப்பு வைக்கவும், பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வைகையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாலும் வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவடிப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 62.34 அடியாக உள்ளது. வரத்து 1647 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4064 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.90 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 70.32 அடியாகவும் உள்ளது.

    ×