search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணையில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
    X

    வைகை அணை (கோப்பு படம்)

    வைகை அணையில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் 3-ம் கட்ட பூர்வீக பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் 3-ம் கட்ட பூர்வீக பாசனத்திற்காக கடந்த மாதம் 29-ந்தேதி 2500 கனஅடிநீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று அணையிலிருந்து கூடுதலாக 3200 கனஅடிநீர் பாசனத்திற்கு வெளியேற்ற ப்பட்டது.

    இன்று காலை மேலும் கூடுதலாக 1700 கனஅடி சேர்த்து 4969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் 60.33 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 613 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 3666 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ப்படுவதால் திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தண்ணீர் அதிகமாக செல்லும் இடங்களில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டமும் 142 அடியில் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது 140.50 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்றதால் நீர்வரத்து 279 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 511 கனஅடி நீர் வெளியேற்ற ப்படுகிறது. நீர் இருப்பு 7261 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி, வரத்து 57 கனஅடி, திறப்பு 30 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.64 அடி, வரத்து 21 கனஅடி,திறப்பு 27 கனஅடி.

    Next Story
    ×