என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாட்சியம்"

    • காவல்துறை நேரடியாக FIR பதிவு செய்ய அதிகாரம் இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
    • சாட்சி மிரட்டப்பட்டால், அவர் மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டிய நடைமுறை சிக்கலானது.

    வழக்குகளில் சாட்சி சொல்பவர்களை மிரட்டுபவர்கள் மீது காவல்துறை நேரடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

    ஒரு கொலை வழக்கில் சாட்சியை மிரட்டியதாக 195A பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    காவல்துறை நேரடியாக FIR பதிவு செய்ய அதிகாரம் இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கு  நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

    அப்போது பேசிய நீதிபதிகள், சாட்சி மிரட்டப்பட்டால், அவர் மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டிய நடைமுறை சிக்கலானது. இதனால் விசாரணை பாதிக்கப்படும்.

    இந்த குற்றத்திற்கு காவல்துறை FIR பதிவு செய்து விசாரிக்க, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முறையான புகார்க்காக காத்திருக்கத் தேவையில்லை.

    இதுபோன்ற வழக்குகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 மற்றும் 156-ன் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உள்ளது. 

    எனவே சாட்சிகள் மிரட்டப்படுவது தொடர்பாக நேரடியாக  காவல்துறை FIR பதிந்து விசாரிக்கலாம் என கூறி கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் மேற்கூறிய வழக்கில் ஜாமீன் பெற்ற குற்றவாளி 2 வாரங்களுக்குள் சரணடையவும் உத்தரவிட்டனர். 

    ஊழல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். #NawazSharif #PakistanCourt
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்ததை ‘பனாமா லீக்ஸ்’ வெளியிட்டு இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

    இந்த ஊழல் வழக்கில் நவாஸ் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்தி வரும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு, இந்த வழக்கில் சாட்சியம் அளிக்குமாறு நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக 128 கேள்விகள் அடங்கிய பட்டியலை நவாஸ் ஷெரீப்பின் வக்கீலிடம் நீதிபதி ஒப்படைத்து இருந்தார்.

    அதன்படி இந்த வழக்கில் நேற்று நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது லண்டன் அவென்பீல்டு குடியிருப்பில் வாங்கப்பட்டுள்ள வீடுகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘லண்டன் சொத்துகளை வாங்கவோ, அதற்கு உதவி புரியவோ இல்லை’ என கூறினார். மேலும் அந்த சொத்துக்கு தான் உரிமையாளர் இல்லை என மறுத்த நவாஸ் ஷெரீப், அதற்கான பணப்பரிமாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.  #NawazSharif #PakistanCourt
    ×