என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு நிதியுதவி"

    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
    • ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (50 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (50 வயது) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி (37 வயது), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (29 வயது), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் ராம் (28 வயது) மற்றும் ரமேஷ் (20 வயது) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    சமயபுரம் கோவிலில் யானை தாக்கி பலியான பாகன் கஜேந்திரன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.
    திருச்சி:

    திருச்சி சமயபுரம் கோவிலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையில் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த யானை மசினி தாக்கியதில் பாகன் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திடீர் ஆத்திரத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது. யானை மசினி கோவிலை விட்டு வெளியே ஏற்றப்பட்டு அங்குள்ள கொட்டகையில் கட்டி போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிந்ததும் இறந்த பாகன் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதன்படி இன்று பாகன் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு சமயபுரம் கோவில் அன்னதானம் சமுதாய கூடத்தில் நடந்தது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பாகன் கஜேந்திரனின் மனைவி தேவிபாலா, மகன் அச்சுதன் ஆகியோரிடம் வழங்கினர்.

    பின்னர் இதுகுறித்து கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், யானை தாக்கி பாகன் கஜேந்திரன் இறந்த சம்பவம் அறிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கவலையடைந்ததாகவும் குடும்ப தலைவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் இறந்த கஜேந்திரன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதன்படி இன்று ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கஜேந்திரனின் குடும்ப வாரிசுக்கு வேலை கொடுப்பது பற்றி அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவில் யானை தொடர்பாக கோவில் நிர்வாகமும் வனத்துறையும் ஆலோசித்து தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் காட்டில் விடுவதா? அல்லது கோவிலிலேயே வளர்ப்பதா? என்பது பற்றி அரசு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×