என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை தனியார் ஆஸ்பத்திரி"
உத்தமபாளையம்:
தேனி அருகே தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மோகன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜெயா (வயது 43). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு யுவன் பிரசன்னா (19) என்ற மகனும் சஞ்சனா (14) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியை ஜெயா, அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் நிறைவுமதி, யாசிகா ஆகியோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதில் ஜெயா மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மற்றவர்கள் தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயா பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மற்ற 4 பேரின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியை ஜெயாவின் மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை முடிவு கிடைத்த பிறகே அவர்கள் என்ன காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. அதில் ஒருவர் இறந்தது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் முத்து கிருஷ்ணாபுரம் வடக்கு செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவ ராமகிருஷ்ணன் (வயது57), கால்நடை டாக்டர்.
மனநலம் பாதிக்கப்பட்ட இவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சீதாலட்சுமி கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை கே.புதூர் பென்னர் காலனியில் உள்ள ஆறுமுக பிள்ளை நகரை சேர்ந்தவர் அமீர் பாட்ஷா (வயது 42). இவர் மாட்டுத்தாவணி பிரஸ் காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நிர்வாகியாக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு அமீர் பாட்ஷா ஆஸ்பத்திரியை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 494-ஐ திருடி கொண்டு தப்பினர்.
மறுநாள் ஆஸ்பத்திக்கு வந்த அமீர் பாட்ஷா பணம் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






