என் மலர்
நீங்கள் தேடியது "Money Robbery In Private Hospital"
மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 1 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை:
மதுரை கே.புதூர் பென்னர் காலனியில் உள்ள ஆறுமுக பிள்ளை நகரை சேர்ந்தவர் அமீர் பாட்ஷா (வயது 42). இவர் மாட்டுத்தாவணி பிரஸ் காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நிர்வாகியாக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு அமீர் பாட்ஷா ஆஸ்பத்திரியை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 494-ஐ திருடி கொண்டு தப்பினர்.
மறுநாள் ஆஸ்பத்திக்கு வந்த அமீர் பாட்ஷா பணம் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.