என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் குண்டுவெடிப்பு"

    • டெல்லி கார் குண்டு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
    • சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    2025-ஆம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் பயங்கரவாதத் தாக்குதலாகும்.

    கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று மாலை சரியாக 6.52 மணிக்கு பழைய டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் வாசல் எண் 1க்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரைப் பயன்படுத்தி நடந்த தற்கொலைத் தாக்குதல் நாட்டையே அதிரச் செய்தது. 

    இந்த கோரச் சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சம்பந்தப்பட்ட கார், அரியானா மாநிலப் பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ஹூண்டாய் i20 ஆகும். இதில் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் இருந்த 6 கார்கள், 2 ஈ-ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா என சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

    இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

    அதன்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி (Dr. Umar-un-Nabi). இவர் அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா (Al-Falah) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று பிற்பகல் 3:19 மணிக்கே செங்கோட்டைப் பகுதிக்கு வந்த உமர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்துள்ளார். திங்கட்கிழமை என்பதால் செங்கோட்டை மூடப்பட்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை என சந்தேகிக்கப்படுகிறது. 

    இது ஒரு "White-collar terror" (கல்வி கற்றவர்களால் நடத்தப்படும் பயங்கரவாதம்) என பாதுகாப்பு அமைப்புகள் வகைப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் உமருடன் தொடர்புடைய மேலும் சில மருத்துவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃபரிதாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கும்பலுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மத்திய அரசு இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்தது. உமர் உன்-நபிக்கு உதவியதாக இன்று கைது செய்யப்பட்ட நபருடன் சேர்த்து இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சிரியாவில் நிகழ்ந்த கார்குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிர் இழந்தனர். #Syria #CarBomb
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தையில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது.

    மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்களில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் இதில் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  #Syria #CarBomb 
    ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் இன்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #Taliban #Afghanceasefire #AfghanBlast
    காபூல் :


    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. 

    ஆனால், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் நேற்று முதல் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். 

    ரம்ஜான் கொண்டாடப்படும் இன்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசு படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தலைநகர் காபூல் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாலிபன்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ரம்ஜானை கொண்டாடி வந்தனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் ரோடாட் மாவட்டத்தில் உள்ள நானகராகர் பகுதியில் தாலிபன்கள், ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. 

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் தாலிபன்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உள்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #Taliban #Afghanceasefire #AfghanBlast
    ×