search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shortages"

    • கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    நாம் இந்தியர் கட்சியின் மாநிலத்தலைவர் என்.பி.ராஜா தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி–யுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள–தாவது:-

    மனிதனின் பயன்பாட்டிற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட கரும்பாறைகள் மற்றும் சுக்காம்பாறைகளை அரசு அனுமதியோடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட மக்களின் கட்டுமான பொருட்களின் தேவைக்கு அங்கங்குள்ள குவாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற குவாரி விபத்திற்கு பிறகு கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அனுமதிக்கபட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சில குவாரிகளில் மட்டும் ஜல்லி, எம்.சாண்டு எடுக்கப்படுகிறது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது. எனவே கட்டிடத்தொழிலை நம்பி இருக்கும் கட்டிடத்தொழிலாளர்கள் கட்டிடத்திற்கு சரக்கு சப்ளை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

    குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே கல் எடுக்க அனுமதி வழங்குவதால் குவாரிகளில் அதிக ஆழம் வெட்டி எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் அதிக பாறைகள் இருக்கும் இடங்களில் குவாரிகள் அமைப்பதற்கு உரிமம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி உரிமம் வழங்க வேண்டும். இதனால் கட்டுமான பொருட்கள் விலையும் குறையும், விபத்துக்களும் தடுக்கப்படும். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில் குவாரிகளை முறைப்படுத்தி, கட்டுமான பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகளை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இதேபோல் டாஸ்மாக் மதுபான கடை மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கேயே அமர்ந்து மது அருந்த பார்வசதிகள் உள்ளன. ஆனால் கடந்த 4,5 மாதகாலமாக டாஸ்மாக் கடையில் பார் நடத்த அனுமதி புதுப்பிக்கப்படாததால் தெரு ஓரங்களிலும், மறைவான இடங்களிலும், நிறுத்தப்பட்டுயிருக்கும் வாகனங்கள் மறைவிலும் மதுபிரியர்கள் மது அருந்துகின்றார்கள்.

    இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். சிறுவர்கள், பெண்கள் அச்சத்தோடு நடமாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுப்பதற்கு பார் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10 சதவீதமே இருப்பதால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Drinkingwater #Chennai
    சென்னை:

    சென்னை நகருக்கு பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    மேலும் வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவ மழையின் போது நல்ல மழை பெய்தால் 4 ஏரிகளும் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சென்னை நகரை முற்றிலும் ஏமாற்றியது.

    கஜா புயல் காரணமாக சென்னையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திசை மாறியதால் சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

    இதனால் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் நிரம்பவில்லை. ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் அளவு 10 சதவீதம் தான் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளில் 4 ஆயிரத்து 865 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது ஆயிரத்து 86 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது.

    இந்த தண்ணீர் சென்னை நகருக்கு குடிநீர் தேவையை ஒரு மாதம்தான் பூர்த்தி செய்யும். இதனால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    2017-ம் ஆண்டு சந்தித்த குடிநீர் தட்டுப்பாட்டை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவிடம் இருந்து தண்ணீர் பெற தமிழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் தங்கள் தேவைக்கே தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீரை தற்போது திறக்க முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிருஷ்ணா நதிநீர் இப்போது கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.

    குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாயில் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 650 மில்லியன் லிட்டர் தண்ணீராக குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.



    மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Drinkingwater  #Chennai

    ×