search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop shut down"

    அகில இந்திய சம்மேளனம் சார்பாக வணிகர்களை பெரிதும் பாதிக்கின்ற சட்டங்களை மாற்றியமைக்க கோரி வருகிற 28-ந்தேதி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சம்மேளனம் சார்பாக வணிகர்களை பெரிதும் பாதிக்கின்ற சட்டங்களை மாற்றியமைக்க கோரி வருகிற 28-ந்தேதி இந்தியா முழுவதும் கடை அடைப்பு நடத்துவது என அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆண்டு பலமுறை கடை அடைப்புகள் நடத்தப்பட்டதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தமிழகத்தில் கடை அடைப்புக்கு மாற்றாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மண்டல அளவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 28-ந்தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு சென்னை-காஞ்சி மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா ஆர்ப்பாட்ட விளக்க உரை ஆற்ற உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
    சென்னை :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டத்தை நசுக்க போலீசார் நடத்தியிருக்கும் காட்டு தர்பாரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடுமையாக கண்டிக்கிறது.

    முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான சாமானிய மக்களை கைது செய்திருக்கலாமே அன்றி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்கள் போராட்டம் திடீரென்று ஏற்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடக்கும் போராட்டம்.

    கண்மூடித்தனமான போலீசாரின் காட்டு தர்பார் 12 உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 65 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த காட்டு தர்பாருக்கு ஒட்டுமொத்த காவல்துறையோ, அரசோ காரணம் என்று சொல்லிவிட முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலையின் பணபலமே இதற்கு காரணமாக இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை செய்து பணத்துக்காக பணியாற்றிய கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த காட்டு தர்பாரை கண்டித்து 24-ந்தேதி(இன்று) தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

    தமிழக வரலாற்றில் இந்த காட்டுதர்பார் ஒரு கறைப்படிந்த அத்தியாயம், வணிகர்கள், விவசாயிகள், பொதுத்துறை ஊழியர்கள் என்று போராடும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக இதுபோன்ற காட்டு தர்பார் கட்டவீழ்த்து விடப்படலாம். இன்றே அதற்கு முடிவு கட்டுவதற்கு கடையடைப்பில் அனைத்து வணிகர்களும் பங்கேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த போராட் டத்துக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டது.

    தடையை மீறி பொதுமக்கள் பேரணியாக சென்றபோது கலவரம் வெடித்தது. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உண்டானது.

    இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியானார்கள். ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று தூத்துக்குடியில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு நடத்த போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு த‌குந்த நியாயம் கிடைக்கும் வரை தூத்துக்குடியில் காலவரையற்ற முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி நகர் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

    தூத்துக்குடியை சுற்றியுள்ள புதுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், முள்ளக்காடு, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகளும், சில பெட்டிக்கடைகளும் மட்டுமே திறந்திருந்தன.

    ×