என் மலர்
நீங்கள் தேடியது "Sarkar Teaser"
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் வெளியாகி சாதனை படைத்துள்ளது. #SarkarTeaser
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. டீசர் வெளியான பத்து நிமிடத்தில் 10 லட்சமும் பார்வையாளர்களும், 20 நிமிடத்தில் 20 லட்சமும், 35 நிமிடத்தில் 30 லட்சமும், 55 நிமிடத்தில் 40 லட்சமும், 75 நிமிடத்தில் 50 லட்சமும், 1 மணி 50 நிமிடத்தில் 60 லட்சமும், 2 மணி 30 நிமிடத்தில் 70 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்து சாதனை படைத்துள்ளது.
Boom! #SarkarTeaser has crossed 7M+ views in 2hrs 30mins! pic.twitter.com/jKHlNSkbBI
— Sun Pictures (@sunpictures) October 19, 2018
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் தீபாவளி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #SarkarTeaser
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. #Sarkar #SarkarTeaser #Vijay
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டீசரை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 6 வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாலை 6 மணிக்கு சர்கார் டீசர் வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கூகுளின் தலைமை பொறுப்புக்கு வந்த சுந்தர் பிச்சையின் வேடத்தில் தான் விஜய் நடிக்கிறார். #Sarkar #Vijay #SarkarTeaser
தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் மற்றும் சர்கார் படத்தின் டீசர் சிறப்பு விருந்தாக விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #AjithKumar #Vijay
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமியும் நடிக்கின்றனர். தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு மற்றும் சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநாளில் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் சீமராஜா, சமந்தாவின் யு டர்ன் படங்கள் ரிலீசாக இருக்கிறது. தனுஷின் வடசென்னை படத்தையும் அதேநாளில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #AjithKumar #Vijay #Sarkar #Viswasam






