என் மலர்

  சினிமா

  சிறப்பு விருந்து... ஒரே நாளில் களமிறங்கும் விஜய், அஜித்
  X

  சிறப்பு விருந்து... ஒரே நாளில் களமிறங்கும் விஜய், அஜித்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் மற்றும் சர்கார் படத்தின் டீசர் சிறப்பு விருந்தாக விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #AjithKumar #Vijay
  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். அஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  சமீபகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமியும் நடிக்கின்றனர். தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு மற்றும் சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.  அதேநாளில் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் சீமராஜா, சமந்தாவின் யு டர்ன் படங்கள் ரிலீசாக இருக்கிறது. தனுஷின் வடசென்னை படத்தையும்  அதேநாளில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #AjithKumar #Vijay #Sarkar #Viswasam

  Next Story
  ×