என் மலர்
நீங்கள் தேடியது "Ramapuram"
போரூர்:
ராமாபுரம் ராயலா நகர் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரை வயது44 அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி அபிதா (28).
இவர்களுக்கு லட்சுமி நாராயணன் (10) ஸ்ரீமகா லட்சுமி (6) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
கடந்த மாதம் 23-ந்தேதி அபிதா நான் எந்த விதத்திலும் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்று கணவர் செந்தாமரைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை சம்பவத்தில் தீடீர் திருப்பமாக அபிதாவின் தாய் சாந்தா தியாகராய நகர் துணை கமிஷனர் அசோக்குமாரிடம் நேற்று புகார் மனு அளித்தார் அதில் எனது மகள் அபிதா மற்றும் குழந்தைகள் சாவிற்கு கணவர் செந்தாமரை தான் காரணம். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதன்பேரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கவுதமன், செந்தாமரையை கைது செய்தார்.
ராமாபுரம் குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். அருகில் உள்ள வெல்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கையான 2 சிறுமிகள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் நின்று விளையாடி கொண்டிருந்தனர்
அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி மணிகண்டனிடம் தட்டிக் கேட்டனர். அவர் சிறுமிகளின் பெற்றோரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
போரூர்:
ராமாபுரம், முல்லைநகர் 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் குமரன். கார் பென்டர். இவரது மனைவி அமுதா (வயது34). குமரன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குமரன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதை அமுதா கண்டித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அமுதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






