search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "R Ashoka"

    • அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
    • இப்போது அரசின் நிதி நிலை குறித்து மந்திரிகள் பேசுகிறார்கள்.

    பெங்களூரு:

    பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    துணை முதல்-மந்திரி பதவி அரசியல் சாசன பதவி அல்ல. கட்சிகள் தான் இந்த பதவியை வழங்குகின்றன. அரசு ஆலோசனை கூட்டங்களில் முதல்-மந்திரி பேசுவதற்கு முன்னரே துணை முதல்-மந்திரி பேசுகிறார். புதிய அரசு வரும்போது, முதல்-மந்திரி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசுவது வழக்கம். ஆனால் புதிய ஆட்சியில் முதல்-மந்திரி அமைதியாக உள்ளார். துணை முதல்-மந்திரி ஆவேசமாக பேசுகிறார்.

    அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். மிரட்டுவது என்பது அவரது வழக்கம். காங்கிரஸ் 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. இது கர்நாடக மக்களுக்கு செய்த மிகப்பெரிய அவமானம். காங்கிரஸ் அரசு அமைந்து 24 மணி நேரத்தில் உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனர்.

    ஆனால் 240 மணி நேரம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இலாகா உத்தரவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். வழியில் செல்பவர்களுக்கு எல்லாம் உத்தரவாத வாக்குறுதிகளை கொடுக்க முடியுமா? என்று மந்திரிகள் சொல்கிறார்கள். இது மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் இல்லையா?.

    அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் இப்போது அரசின் நிதி நிலை குறித்து மந்திரிகள் பேசுகிறார்கள். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சித்தராமையாவுக்கு இதுகுறித்து முன்பே ஞானம் இருக்கவில்லையா?. இதை பார்த்து மக்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக காங்கிரஸ் கூறியது. இப்போது அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த விஷயத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மந்திரி பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிப்பதாக சொல்கிறார். இதை யாராலும் செய்ய முடியாது. தைரியம் இருந்தால் அந்த அமைப்புக்கு தடை விதியுங்கள் பார்க்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொள்வது வரவேற்புக்குரியது. ஊழல் வழக்குகளில் ஜாமீனில் இருப்பவர்கள் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசுகிறார்கள்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

    • நாங்கள் இங்கு விளையாட வந்துள்ளோம்.
    • கடந்த முறை கூட்டணி ஆட்சி வந்தது.

    பெங்களூரு :

    வருவாய்த்துறை மந்திரியும், பத்மநாபநகர், கனகபுரா தொகுதிகளின் பா.ஜனதா வேட்பாளருமான ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில கருத்து கணிப்புகள், பா.ஜனதா அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. இந்த முறை பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி.

    ஒருவேளை தொங்கு சட்டசபை அதாவது இடங்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த அரசியல் ஆட்டம் ஆடி வெற்றி பெறுவோம். நாங்கள் இங்கு விளையாட வந்துள்ளோம். கடந்த முறை கூட்டணி ஆட்சி வந்தது. பின்னர் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

    கடந்த 4 ஆண்டுகளாக நிலையான ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்தினோம். தேர்தல் முடிவு வந்த பிறகு கட்சி மேலிட தலைவர்கள் உத்தரவுப்படி நாங்கள் நடந்து கொள்வோம்.

    ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காமல், பெரிய கட்சியாக உருவெடுத்தால், நாங்களே ஆட்சி அமைப்போம். பா.ஜனதா வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார் என்பதை எங்கள் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி ஒரு பஞ்சரான பஸ் ஆகும்.
    • டிரைவர் சீட்டுக்கு பின்னால் சோனியா காந்தி இருப்பார்.
    • காங்கிரஸ் கட்சி ஒரு நாடக கம்பெனி ஆகும்.

    பெங்களூரு :

    பெங்களூரு விதானசவுதா வில் வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு பஞ்சரான பஸ் ஆகும். பஞ்சரான அந்த பஸ்சுக்கு 80 வயதான மல்லிகார்ஜுன கார்கேவை டிரைவர் சீட்டில் அமர்த்தி உள்ளனர். டிரைவர் சீட்டுக்கு பின்னால் சோனியா காந்தி இருப்பார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், அவர் ஒரு ரிமோட் கன்ட்ரோல் தான்.

    காங்கிரஸ் கட்சி ஒரு நாடக கம்பெனி ஆகும். ராகுல்காந்தி, சித்தராமையா மக்களிடம் நாடகமாடுகிறார்கள். ராகுல்காந்தி பாதயாத்திரை என்ற பெயரில் நாடகமாடுகிறார். சட்டசபை தேர்தலுக்கு சித்தராமையா சொகுசு பஸ்சில் நாடகமாடுவதற்கு செல்ல இருக்கிறார்.

    60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியினர் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு என்ன செய்தார்கள்?. கர்நாடகத்தில் அந்த சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிகரித்துள்ளார். இடஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி நாகமோகனதாஸ் தலைமையில் குழுவை அமைத்தது சித்தராமையா இல்லை. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது தான் அந்த குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவின் சிபாரிசுபடி தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில் முன்னுரிமை அளிக்கும் விதமாக பா.ஜனதா அரசு இடஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு ஒரு போதும் பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவலையே இல்லாதவர் தான் இப்படி நடந்து கொள்ள முடியும்
    • பா.ஜனதா ஆட்சியில் பெங்களூரு அழிந்துவிட்டது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஹாசன், மண்டியா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை-வெள்ளம் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் பெங்களூரு விதானசவுதாவில் மழை-வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகாரிகள், வருவாய்த் துறை மந்திரி ஆர்.அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது மந்திரி ஆர்.அசோக் தூங்கியதாக கூறப்படுகிறது. தலையை கையால் தாங்கியபடி அவர் கண் மூடியபடி இருந்தார். இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பதிவில் மந்திரி ஆர்.அசோக்கை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளது.

    அதாவது, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மழை-வெள்ளத்தால் தத்தளிக்கிறது. மாநில மக்கள் மழையால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் மழை-வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மந்திரி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். முக்கியமான கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி இவ்வாறு இருப்பது கண்டித்தக்கது. கவலையே இல்லாதவர் தான் இப்படி நடந்து கொள்ள முடியும், பெங்களூருவை உலகத்தரத்திற்கு மாற்றுவோம் என்று கூறிய பா.ஜனதாவினர் தற்பொது பெங்களூருவை நீரில் மூழ்கும் நகரமாக மாற்றிவிட்டனர். பா.ஜனதா ஆட்சியில் பெங்களூரு அழிந்துவிட்டது. மழையால் தற்போது பெங்களூருவில் நிலவும் நிலைக்கு பா.ஜனதாவே காரணம். முதல்-மந்திரியும் இதற்கு பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

    ×