search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PWD Office"

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பிராங்களின், தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுவை தமிழ்நெஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    • நிலத்தடி நீருக்கு ஆதாரமான வேல்ராம்பட்டு ஏரியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பொதுப்ப ணித்துறை பொறியா ளர்களை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்துக்கு லோகுஅய்யப்பன் தலைமை வகித்தார். மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், திராவிடர் கழகம் சிவவீரமணி, வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், பெரியார்சிந்தனையாளர் இயக்கம் தீனா, அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், ராவணன் படிப்பகம் அபிமன்னன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தேசிய இளைஞர் முன்னணி கலைபிரியன், பீ போல்ட் பஷீர்அகமது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பிராங்களின், தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுவை தமிழ்நெஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தையொட்டி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தின் நுழைவுவாயிலை ஊழியர்கள் பூட்டினர். இதையடுத்து பொதுப்பணித்துறை நுழைவுவாயிலை முற்றுகையிட்டு சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர். நிலத்தடி நீருக்கு ஆதாரமான வேல்ராம்பட்டு ஏரியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பொதுப்ப ணித்துறை பொறியா ளர்களை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.

    • விவசாயிகள் பொதுபணித்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் காரணமாக பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்தது.

    ஈரோடு:

    ஈரோடு கோண வாய்க்கால் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு இன்று கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்து செயற்பொறியாளர் கண்ணனிடம் மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அரசாணை எண் 276-ன் படி அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. ஆயக்கட்டில் இல்லாத சிலரால் இந்த பணிகள் முடக்கப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் (2022 - 2023) மட்டும் 4 முறை கால்வாயில் உடைப்புகள் ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் இடை நிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.

    சீரமைப்பு பாசன பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் 276-ன் படி கால்வாய் சீரமைப்பு பணிகளை வரும் மே 1-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி தெளிவாக ஆணையிட்டது.

    மேலும் கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள் போட்ட வழக்கில் சீரமைப்பு பணிகளை செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் ஊழியர்களுக்கும், எந்திரங்களுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒரு ஆணையையும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    எனவே வரும் 1-ந் தேதி எவ்வித காலம் தாழ்த்தாமல் சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொதுபணித்துறை அலுவலகம் முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள் கூறும்போது, வரும் 1-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லை யென்றால் 5-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    விவசாயிகளின் இந்த திடீர் காத்திருப்பு போராட்டம் காரணமாக ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்தது.

    • 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
    • பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. இதுபோல் இந்தத் திட்டத்தில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் ஆழியாற்றில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதற்கு பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய கோரியும் பி.ஏ.பி. திட்டம் உருவான போது விடுபட்டு போன ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வலியுறுத்தியும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார். மாநில செயல்தலைவர் என்.எஸ்.பி. வெற்றி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,வட்டார தலைவர் வேலுமணி, நகர தலைவர் மைனர் தங்கவேல், கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் காவி.பழனிசாமி, எலவந்தி ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன்,வாவிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி,உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இன்னும் 1 மாதத்திற்குள் இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் பொள்ளாச்சி பி.ஏ.பி அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலர், பல்லடம் தாசில்தார், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அத்துடன் முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமை நிலைய செயலாளர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு திட்டத்தை ரத்து செய்யக் கோரி பதிவுத்தபால் மூலமாகவும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

    ×