search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Port Blair"

    • முப்படைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை.
    • போர்த் திறனை மேம்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதம்.

    போர்ட் பிளேயர்:

    முப்படைகளின் தளபதிகள் பங்கேற்ற 36-வது மாநாடு, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் ப்ளேயரில் நடைபெற்றது. இந்தியாவின் கடல்சார் சேவை, ஒருங்கிணைந்த சேவை, திறன்களின் கூட்டு பலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், அந்தமான், நிகோபார் கமான்ட் லெப்டினண்ட் தலைமை தளபதி ஜெனரல் அஜய் சிங், தெற்கு தீவின் லெப்டினண்ட் ஜெனரல் ஜேஎஸ். நைன், மேற்கு கடற்படை வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், தெற்கு கடற்படை வைஸ் அட்மிரல் ஹம்பிஹோலி, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஜே.சலபதி, கிழக்கு கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.டி.எம். சஞ்சய் வத்சயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்கட்டமைப்பு, முப்படைகளின் பிராந்திய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், முப்படைகளின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான வழிகள் மற்றும் முப்படைகளின் தயார் நிலை குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது, போர்த் திறனை மேம்படுத்துவது, செயல்பாடுகளை மிகவும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான வழிகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    ×