search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry CM Narayanasamy"

    அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். #PondicherryCM #Narayanasamy #CentralGovt
    புதுச்சேரி:

    அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களையும் கண்காணிக்க சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இது, தனி மனிதரின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-


    கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கம்ப்யூட்டரை கண்காணிப்பது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறி உள்ளார். #PondicherryCM #Narayanasamy #CentralGovt
    பிரதமர் மோடி தனது 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். #PondicherryCM #Narayanasamy #PMModi
    கடலூர்:

    கடலூர் மாவட்ட உலகத்திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூரில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். ஆனால் இதுநாள் வரை எந்த பணமும் வங்கியில் செலுத்தவில்லை. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை.

    ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். பொருளாதார வீக்கம் குறைக்கப்படும் என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்போம் என்றார். ஆனால், இதில் எதுவும் நடைபெறவில்லை.

    தமிழகத்திலேயே கடலூரில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் ரூ.34 மட்டுமே விற்பனை செய்கிறோம். இது மிகப்பெரிய கொள்ளை. இவ்வாறு, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளையடித்து வைத்துள்ளது.

    பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதுவும் நடைபெறவில்லை. ஜி.எஸ்.டி வரியால் பல தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லை, நிலம் விற்பனை முடக்கியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் கேட்டால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் சண்டை நடக்கிறது என்று கூறுகிறார், பிரதமர் மோடி.

    வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய பாடத்தை கற்பிக்கும்.

    இலங்கையில் தமிழர்கள் இறப்பிற்கு காங்கிரஸ் காரணமல்ல. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் எங்களுக்கு வருத்தம் இருந்தது. எனது தனிப்பட்ட கருத்து தலைவரை கொன்றவரை விடக் கூடாது என்பதே. ஆனால், ராகுல்காந்தி இந்த வி‌ஷயத்தில் தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொண்டோம். அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்மீது ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். தீவிரவாதத்தால் காங்கிரஸ் கட்சிக்குத் தான் அதிகப்படியான இழப்பு. இந்திரா காந்தி, ராஜீவ்காந்தியை இழந்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க. எந்த இழப்பையும் சந்திக்கவில்லை. எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும்.

    இவ்வாறு கூறினார். #PondicherryCM #Narayanasamy #PMModi
    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #DMKThalaivarStalin #MKStalin #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொதுக் குழுவில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டர் கலைஞருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி உள்ளார்.

    அவர் அரசியல் வாழ்வில் படிப்படியாக மாணவரணி, இளைஞரணி, சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்-அமைச்சர், கட்சியின் பொருளாளர், செயல் தலைவர் என படிப்படியாக திறம்பட செயல்பட்டு தமிழக மக்களின், தி.மு.க. தொண்டர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர்.

    கலைஞர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது செயல் தலைவர் பொறுப்பை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.

    தமிழக மக்களின் பிரச்சினைக்காக பல முறை சிறை சென்றவர். நான் மத்திய இணை அமைச்சராக இருந்த போதும், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் பலமுறை கலைஞரையும் ஸ்டாலினையும் சந்தித்து பேசியுள்ளேன்.

    கூட்டணி கட்சிகளை மதிக்க தெரிந்தவர். மத சார்பற்ற நிலையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அரும்பாடு படுபவர். அவர் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று இருப்பது தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் உருவாகி உள்ளது என்பதை காட்டுகிறது.

    இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் ஸ்டாலினை சுற்றியே இருக்கும் என்பது என்னுடைய கருத்து. தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.  #DMKThalaivarStalin #MKStalin #Narayanasamy

    புதுவையில் தொடரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பூஜ்ய நேரத்தில் பேசியதாவது:-

    புதுவையில் தொடர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் கடந்த 3 மாதங்களாக அதிகளவில் அரங்கேறியுள்ளது. கோடை விடுமுறையில் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தவர்களின் வீடுகளை நோட்டமிட்டு குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது.

    முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை என நகர பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்தது. புதுவையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். இதே நேரத்தில் கோவில் உண்டியல்களை ஒரு கும்பல் உடைத்து திருடிச்சென்றது.

    தேங்காய்திட்டில் அடுத்தடுத்து கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுபோல 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருட்டு சம்பவங்கள் நடந்தது. நகர பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் தாலி செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடந்தது.

    பகல் நேரத்திலேயே அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் பெண்களிடம் இருந்தும், வீடு திரும்பும் பெண்களிடமும் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசையை காட்டினர். இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. பத்திரிகைகளிலும் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதுபோன்ற சம்பவங்கள் தற்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை.

    வழிப்பறி, கொள்ளை, திருட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்கவில்லை. அரசு இதுபோன்ற செயல்களில் செயல்படும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கடந்த காலத்தை போல இரவு முழுவதும் நகரை சுற்றி வர காவல் ரோந்து வாகனம்(100) மீண்டும் இயக்க வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ஜெயமூர்த்தி பேசும்போது, அரியாங்குப்பத்தில் 3 இடத்தில் திருட்டு சம்பவம் நடந்தது. திருடர்களை பிடிக்கவில்லை என்றார்.

    இதையடுத்து அதி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், இரவு நேரத்தில் காரில் வருபவர்கள்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடுகளை நோட்டமிடுகின்றனர். காரில் வருபவர்களை சோதனை செய்தாலே திருட்டு சம்பவங்கள் குறைந்துவிடும். முதல்-அமைச்சர் வழக்குப் பதிவு செய்வதாக கூறுகிறார். ஆனால் 25 நாட்களுக்கு முன்பு சோலை நகரில் ஒரு வீட்டில் 20 பவுன் நகையை திருடிவிட்டனர். இந்த வழக்கை பதிவு செய்ய போலீசார் முன்வரவில்லை.

    திருட்டு, கொள்ளையை கண்டுபிடிக்கிறார்களோ? இல்லையோ? முதலில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவையில் சில இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் சில பகுதிகளில் கடந்த 3 மாதம் முன்பு நடந்தது. இதை வெளிமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடிச்சென்றனர். இதுகுறித்து காவல்துறையை அழைத்து பேசினேன். பொதுவாக காவல்துறை நள்ளிரவு 12 மணி வரை ரோந்து செல்வார்கள். அதன்பிறகு செல்லமாட்டார்கள். அதிகாலை வரை ரோந்து செல்லும்படி கேட்டுக் கொண்டேன். போலீசாரும் அதிகாலை வரை ரோந்து செல்கின்றனர். இதனால் ஒன்றரை மாதமாக திருட்டு குறைந்துள்ளது. போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு நேரத்தில் போலீசார் பணியாற்றுகிறார்களா? என டி.ஜி.பி., எஸ்.எஸ்.பி. பார்வையிடவும் கூறியுள்ளேன். கடந்த காலத்தில் திருட்டு, கொள்ளை வழக்கு பதிவு செய்யமாட்டார்கள். தற்போது புகார் கொடுத்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. நான் எம்.பி.யாக இருந்தபோது காவல்துறைக்கு ரோந்து வாகனம் வழங்கினேன். தற்போது எம்.பி.க்களிடம் காவல்துறைக்கு ரோந்து வாகனம் வழங்கும்படி கேட்டுள்ளோம். 10 ரோந்து வாகனம் விரைவில் வழங்கப்பட்டு ரோந்து பணி துரிதப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் பற்றிய தீர்ப்பு புதுவைக்கு முற்றிலும் பொருந்தும் என்றும், கவர்னர் கிரண்பேடி இதை சரியாக தெரிந்து கொள்ளாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி கூறினார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? இல்லையா? என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுபற்றி நாராயணசாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தும் என்று நான் ஏற்கனவே கூறினேன். இப்போதும் அதையே தான் சொல்கிறேன். இந்த தீர்ப்பு முற்றிலும் புதுவைக்கு பொருந்தும்.

    அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின்படி டெல்லி மாநில அரசு செயல்படுவதால் அந்த சட்டத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.

    239 ஏ.ஏ. பிரிவின்படி டெல்லி மாநிலத்தில் நிலம், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    மேலும் பல வி‌ஷயங்கள் அந்த பிரிவின் கீழ் உள்ளன. எனவேதான் 239 ஏ. பிரிவின் கீழ் உள்ள மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று கூறி உள்ளனர்.

    அதாவது டெல்லி யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்கு அதிகாரமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா? என்ற விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறி இருக்கிறார்கள். தீர்ப்பில் இந்த அம்சம் புதுவைக்கு பொருந்தும்.

    ஏனென்றால் யூனியன் பிரதேசங்களில் டெல்லிக்கு அடுத்து புதுவையில் மட்டும்தான் சட்டசபை உள்ளது. மக்கள் ஆட்சி செயல்படுகிறது.

    இந்த அம்சம் தொடர்பாக கூறப்பட்ட தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என்று நீதிபதிகள் எதுவும் சொல்லவில்லை. எனவே, டெல்லி சம்பந்தமான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும். இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.

    239 ஏ. என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாத நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் என்பதை கூறுவதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை அமைந்ததுமே அந்த சட்டத்தின் அம்சம் ரத்தாகி விடும்.

    மறுபடியும் சட்டமன்றம் இல்லாத ஒரு நிலை வந்தால் மட்டுமே 239 ஏ. அம்சங்கள் அமலுக்கு வரும்.



    கவர்னர் கிரண்பேடி இதை சரியாக தெரிந்து கொள்ளாமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சட்டசபையிலும் இது சம்பந்தமான விவாதம் இன்று வந்தது.

    அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா..? இல்லையா என குழப்பம் நிலவுவதாகவும் இதற்கு முறையான பதில் அளிக்குமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து நாராயணசாமி கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் அரசியல் சாசன அமர்வு கொண்ட அனைத்திற்கும் பொருந்தும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் உண்டு.

    ஒருசிலர் இல்லாத அதிகாரத்தை தனக்கு உள்ளது என்று கூறுவதை உச்சநீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    இதனிடையே காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் குறுக்கிட்டு, புதுவை கவர்னருக்கு அதிகாரம் என்ன என்பது தொடர்பான தீர்ப்பின் வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் வருகிறது. அதில் உண்மை தெரிந்துவிடும் என கூறினார். #Kiranbedi #Narayanasamy
    ×