என் மலர்

  நீங்கள் தேடியது "pollachi molestation"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport
  சென்னை:

  பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து கொடூரங்களை நிகழ்த்தினர்.
   
  இதுதொடர்பாக  சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து, சீலிட்ட உறையிலிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து புதுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. #pollachimolestation
  புதுக்கோட்டை: 

  பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிறப்பு நீதிபதியின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கு போலீசார் அடிபணியக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

  மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் சலோமி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் ராஜேஸ்வரி, கவிதைப்பித்தன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க துணை செயலாளர் ஜனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #pollachimolestation
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார். #pollachijayaraman #pollachimolestation #mkstalin
  பொள்ளாச்சி:

  பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் அதிமுக, இவ்வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

  பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறது. 

  இந்நிலையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேச தயாராக இருக்கிறார்கள்.  

  குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை. அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தஒரு விசாரணைக்கும் நானும், என்னுடைய குடும்பமும் தயார் என கூறியுள்ளார்.  #pollachijayaraman #pollachimolestation #mkstalin
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களுக்கு வலைவிரித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்த வழக்கில் கைதான நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre
  சென்னை:

  பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பழகி சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜ் என்பவர் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் என தகவல் வெளியானது.

  இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இன்று குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  இந்நிலையில், அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre 
  ×